Published:Updated:

`காவிரி ஆற்றுப்பாலம் பார் -ஆக மாற வேண்டுமா?’ - பேனர் வைத்து எச்சரிக்கும் மக்கள்

`காவிரி ஆற்றுப்பாலம் பார் -ஆக மாற வேண்டுமா?’ - பேனர் வைத்து எச்சரிக்கும் மக்கள்
`காவிரி ஆற்றுப்பாலம் பார் -ஆக மாற வேண்டுமா?’ - பேனர் வைத்து எச்சரிக்கும் மக்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் முக்கிய சாலையில் கஞ்சாநகரம் என்னும் இடத்தில் ஊர் மக்கள் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் பேனர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`காவிரி ஆற்றுப்பாலம் பார் -ஆக மாற வேண்டுமா?’ - பேனர் வைத்து எச்சரிக்கும் மக்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கஞ்சாநகரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை வருவதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து டாஸ்மாக் திறக்க கைக்கூலியாய் செயல்படும் ஊர் மக்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் திறக்க கூடாது என்றும் ஊர் பொதுமக்கள் முக்கிய சாலையில் பேனர் வைத்து எச்சரித்துள்ளனர்.

`காவிரி ஆற்றுப்பாலம் பார் -ஆக மாற வேண்டுமா?’ - பேனர் வைத்து எச்சரிக்கும் மக்கள்

கஞ்சாநகரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனை தொடங்கிவிட்டால் கஞ்சாநகரம், மணக்குடி, கீழிருப்பு, ஆறுபாதி, மன்னம்பந்தல் ஆகிய கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். டாஸ்மாக் அமைய இருக்கும் இடத்துக்கு மிக அருகில் பழைமை வாய்ந்த சிவன் கோயில் மற்றும் காளியம்மன், அங்காளம்மன், மாரியம்மன் கோயில்கள் பல இருப்பதால் அங்கு வந்து செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், டாஸ்மாக் அமைய உள்ள இடத்திலிருந்துதான் வருடத்துக்கு 9 முறை பால்குட காவடி எடுக்கப்படும். எனவே, அங்கு டாஸ்மாக் அமைத்தால் கலவரம் ஏற்பட்டு சுற்றியுள்ள கிராம மக்களும், இளம் தலைமுறையினரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த பேனரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

`காவிரி ஆற்றுப்பாலம் பார் -ஆக மாற வேண்டுமா?’ - பேனர் வைத்து எச்சரிக்கும் மக்கள்

அனைத்துக்கும் மேல், டாஸ்மாக் அமைய இருக்கும் இடத்திலிருந்து புதிதாக கட்டிய காவிரி இணைப்பு பாலம் வழியாக 1 கி.மீ. தூரத்தில் ஏ.வி.சி. கல்வி நிறுவனங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கக் கூடும் என்பதாலும், நூறு வருட மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த கஞ்சாநகரம் - மன்னம்பந்தல் காவிரி பாலம் குடிகாரர்கள் பயன்படுத்தும் பார் ஆக அமையக் கூடாது என்றால் டாஸ்மாக் திறக்கக் கூடாது என்றும் அந்த பேனரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

`காவிரி ஆற்றுப்பாலம் பார் -ஆக மாற வேண்டுமா?’ - பேனர் வைத்து எச்சரிக்கும் மக்கள்

``தமிழக அரசே...! தமிழக அரசே...! தமிழக அரசே...! டாஸ்மாக் அமைய காரணமான கைக்கூலியாக செயல்படும் மனக்குடி கீழிருப்பு, கஞ்சாநகரம், மன்னம்பந்தல், மூங்கில் தோட்டம் கிராமங்களைச் சேர்ந்த சில நபர்கள் மீது நடவடிக்கை எடு..!!" என்ற எச்சரிக்கை பேனரின் அடியில் ``இவண் : 1.கஞ்சாநகரம், மணக்குடி, கீழிருப்பு, மன்னம்பந்தல், ஆறுபாதி, விளநகர், AVCC- மாணவ மாணவிகள்" என்று இருப்பதால் பேனரை யார் வைத்தது என்று தெரியவில்லை. இந்த எச்சரிக்கை பேனர் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.