Published:Updated:

வேப்பமரத்துக்கு வேட்டி, சட்டை அணிந்து மனு!- நகராட்சி அலுவலகத்தில் நடந்த நூதனப் போராட்டம்

விருத்தாசலம் நகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி ஆகிய வரிகளைப் பன்மடங்கு உயர்த்தியதைக் கண்டித்து தி.மு.க சார்பில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மரத்துக்கு மனு அளிக்கும் நூதன போராட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு 150 மடங்கும், வியாபார நிறுவனங்களுக்கு 200 மடங்கும், தொழிற்சாலை மற்றும் திருமண மண்டபங்களுக்கு 300 மடங்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை உடனடியாக கட்ட வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் வழியுறுத்தி வருகின்றனர். இதைக் கண்டித்து தி.மு.க சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால், நகராட்சி நிர்வாகம்  இதுவரை வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, விருத்தாசலம் நகர தி.மு.க சார்பில் வரி உயர்வைக் கண்டித்தும், வரி உயர்வைக் குறைத்து, சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. நகரச் செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் ராமு, உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்டப் பொருளாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் சிங்காரவேலு, அன்பழகன், பாண்டியன், நம்பிராஜன் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். அப்பொழுது நகராட்சி ஆணையர் பாலு அலுவலகத்தில் இல்லாததால் அந்த வளாகத்தில் இருந்த வேப்ப மரத்துக்கு வேட்டி, சட்டை அணிந்து மரத்துக்கு மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் மரம் போல் பொதுமக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாமல் உள்ளதால் மரத்துக்கு மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தியதாக நகர தி.மு.க-வினர் தெரிவித்தனர்.