Published:Updated:

`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்!

 சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அடுப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களுடன்  குடியேறும் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்கள் கொழுந்துரை மற்றும் காரைக்குடி. இந்த இரு கிராமங்களிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாகப் பழுதடைந்து கிடக்கிறது. மேலும், இந்த கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்குவதற்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாகப் பராமரிக்கப்படாததால் கடந்த  2 ஆண்டுகளாகக் காவிரி குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து கொழுந்துரை மற்றும் காரைக்குடி கிராம மக்கள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

 ஆனால், மனு கொடுத்து ஒரு மாதம் ஆன நிலையிலும் இந்த கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் இன்று காலை கொழுந்துரை, காரைக்குடி கிராமங்களை சேர்ந்த மக்கள் சமையல் பாத்திரங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்காவில் குடியேறிய அவர்கள் அங்கு தாங்கள் கொண்டு வந்திருந்த அடுப்பு, பாத்திரங்களை வைத்து முதல் கட்டமாக பால் காய்ச்சும் போராட்டத்தைத் துவக்கினர். இதனைத் தொடர்ந்து அங்கேயே சமையல் செய்யவும் அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் போராட்டத்தினை தொடர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றுவதற்கான பணிகளை துவக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இதனை  ஏற்றுக்கொண்ட மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேறினார். அடிப்படை வசதிக்காக அடுப்பு உள்ளிட்ட பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.