Published:Updated:

அலங்காநல்லூரில் களம் இறங்கும் திமுக

Vikatan Correspondent
அலங்காநல்லூரில் களம் இறங்கும் திமுக
அலங்காநல்லூரில் களம் இறங்கும் திமுக
அலங்காநல்லூரில் களம் இறங்கும் திமுக

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி அலங்காநல்லூரில் ஜனவரி 3ம் தேதி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் திருநாளின் போது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகவும், தமிழக மக்களின் உணர்வுடன் தொடர்பு கொண்டதாகவும் உள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில், 2017-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி அலங்காநல்லூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தோரும்  கலந்து கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.