Published:Updated:

புதிய ரேஷன் கடை பூட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

Vikatan Correspondent
புதிய ரேஷன் கடை பூட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு
புதிய ரேஷன் கடை பூட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு
புதிய ரேஷன் கடை பூட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல்லில் புதிய ரேஷன் கடைக்கு பூட்டப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் புதிதாக திறக்கப்பட்ட ரேஷன் கடை பூட்டப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 30-வது வார்டு நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு, ரயில்வே பாலங்களைத் தாண்டிச்சென்று சிரமப்படுவதாக மக்கள் பல கட்டங்களாகப் போராட்டம் நடத்தினர். இதனால், பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து, இன்று காலை போடிநாயக்கன்பட்டியில் புதிய கடை திறக்கப்பட்டது.

புதிய கடை திறக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், திடீரென வருகை தந்த வட்ட வழங்கல் அதிகாரி வடிவேல்முருகன், எந்தக் காரணமும் சொல்லாமல் ரேஷன் கடையை மூடினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் கடை திறக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.