Published:Updated:

ஹைட்ரோ கார்பன் திட்டம்: சென்னையில் போராட்டம்

Vikatan Correspondent
ஹைட்ரோ கார்பன் திட்டம்: சென்னையில் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டம்: சென்னையில் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டம்: சென்னையில் போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே17 இயக்கம் சார்ப்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராமத்தில் ஒரு வார காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னையிலும் தற்போது போராட்டம் வெடித்துள்ளது.

சென்னையில் போராட்டத்தை முன்னெடுத்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, "மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டின்  மீது அழிவுத் திட்டங்களைத் திணித்து வருகிறது. தமிழக இறையான்மையை மத்திய அரசு மதிக்கவில்லை. தமிழகத்தில் உறுதியான தலைமை இல்லாத சூழலை பயன்படுத்தி, மத்திய அரசிற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றும் தெரிவித்தார்.