Published:Updated:

மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்!

மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்!
மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்!
மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், தமிழக எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். மேலும், சில மீனவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, பிரிட்ஜோ உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

'மீனவர் உயிரிழப்புக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினரைக் கைதுசெய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து உறுதி தர வேண்டும்.' இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தரப்பு கூறியுள்ளது. மேலும், இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

-இரா.மோகன்