Published:Updated:

நெடுவாசல் போராட்டத்தில் பெண் ஒருவர் பலி!

Vikatan Correspondent
நெடுவாசல் போராட்டத்தில் பெண் ஒருவர் பலி!
நெடுவாசல் போராட்டத்தில் பெண் ஒருவர் பலி!
நெடுவாசல் போராட்டத்தில் பெண் ஒருவர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில், மத்திய அரசு அறிவித்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு  எதிராக நெடுவாசலில் 21 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 21-வது நாள் போராட்டத்தின் போது, 60 வயது மதிக்கத்தக்க பொன்னம்மாள் என்ற பெண் உயிரிழந்தார்.

நெடுவாசல் போராட்டத்தில் பெண் ஒருவர் பலி!

இந்நிலையில், கிராமத்துப் பெண்கள் மார்பில் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பொன்னம்மாள் என்பவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நெடுவாசல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.