Published:Updated:

ஹைட்ரோ கார்பன் திட்டம்! நெடுவாசல் போராட்டக் குழுவினரிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர்

'மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டத்தை திணிக்கமாட்டோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக' நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுவாசல் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 20 நாளுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசும், மத்திய அரசும் மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று  உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் நெடுவாசல் போராட்டக் குழுவினர் டெல்லிக்குச் சென்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை நேரில் சந்தித்துப் பேசினர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுவினர், 'மத்திய அமைச்சரிடம் திட்டம் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கினோம். மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தனர்.