Published:Updated:

மெரினாவில் திடீர் போலீஸ் குவிப்பு! போராட்ட வதந்தியால் பரபரப்பு

அஸ்வினி.சி
மெரினாவில் திடீர் போலீஸ் குவிப்பு! போராட்ட வதந்தியால் பரபரப்பு
மெரினாவில் திடீர் போலீஸ் குவிப்பு! போராட்ட வதந்தியால் பரபரப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் திடீர் போலீஸ் குவிப்பு! போராட்ட வதந்தியால் பரபரப்பு



 

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல், காரைக்கால் உட்பட  நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்ட ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. எனவே, வெகு விரைவில் நெடுவாசல் மற்றும் காரைக்காலில் பூமிக்கடியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் நெடுவாசலில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய- மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதால் நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மெரினாவில் திடீர் போலீஸ் குவிப்பு! போராட்ட வதந்தியால் பரபரப்பு


 

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் புகழ்பெற்ற மெரினாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஃபேஸ்புக் வாயிலாக ஒன்று திரண்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.