Published:Updated:

விவசாயிகளுக்கு ஆதரவாக பார்வையற்றோர் போராட்டம்!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
விவசாயிகளுக்கு ஆதரவாக பார்வையற்றோர் போராட்டம்!
விவசாயிகளுக்கு ஆதரவாக பார்வையற்றோர் போராட்டம்!


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், பார்வையற்றோரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் கடந்த 20 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக பார்வையற்றோர் போராட்டம்!

அவர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு எதிரில், கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், 10-க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், விவசாய சங்கத் தலைவர் புலியூர் நாகராஜன், ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த லெனின் பாண்டியன், சமூக நீதிப்பேரவை ரவி, திருநங்கை கஜோல் எனப் பலரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 

சி.ய.ஆனந்தகுமார்

படம் என்.ஜி. மணிகண்டன்