Published:Updated:

விவசாயிகள் போராட்டத்துக்‌கு ஆதரவு: தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

விவசாயிகள் போராட்டத்துக்‌கு ஆதரவு: தமிழகத்தில் இன்று கடையடைப்பு!
News
விவசாயிகள் போராட்டத்துக்‌கு ஆதரவு: தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

விவசாயிகள் போராட்டத்துக்‌கு ஆதரவு: தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

டெல்லியில், தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம் நடக்கிறது.

விவசாயிகள் போராட்டத்துக்‌கு ஆதரவு: தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

படம்: கே.ஜெரோம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல்  தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதையடுத்து, மத்திய, மாநில அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தபோதும், 'கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று தமிழகத்தில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது. இதற்கு, தி.மு.க, அ.தி.மு.க பன்னீர்செல்வம் அணி, காங்கிரஸ், த.மா.கா, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

 இன்று, தமிழகத்தில் கடைகள் அடைக்கப்படும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் இன்று 60 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என வெள்ளையன் கூறியுள்ளார்.