Election bannerElection banner
Published:Updated:

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராடும் மக்களை காவல்துறை கைது செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

'நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் மதுபானக்கடைகள் இருக்கக் கூடாது' என்று சில மாதங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அதிரடி உத்தரவால், தமிழக அளவில் 3,303 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக்கும் ஒன்று. இதனால், டாஸ்மாக் கடைகளை மறுபடியும் வேறு இடங்களில் கொண்டு வர தமிழக அரசு முயன்றது. இதற்கு ஏதுவாக பல்வேறு மாற்று இடங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் தேடியது. இதையடுத்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசு திறக்க முயன்றது. 

தமிழக அரசின் இந்த செயலை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுமக்கள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அரங்கேற்றினர். இந்தப் போராட்டங்களில் பெருந்திரளான பெண்கள் பங்கேற்றனர் என்பது அனைவரையும் கவனிக்க வைத்தது. ஆனால், வழக்கம் போல இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது காவல்துறை.

இந்தநிலையில், திருமுல்லைவாயில் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மக்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடுவோரை கைது செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'டாஸ்மாக் கடையின் விளம்பர பலகையை கிழிப்பது பெருங்குற்றமா?' என்று கேள்வி எழுப்பினார். மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது என உத்தரவு நாளை பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருமுல்லைவாயில் காவல்துறை ஆய்வாளரையும் நாளை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு