Published:Updated:

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த அரசியல் கட்சித் தலைவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த அரசியல் கட்சித் தலைவர்கள்!
கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த அரசியல் கட்சித் தலைவர்கள்!

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த அரசியல் கட்சித் தலைவர்கள்!

கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக வைகோ, முத்தரசன், பழ.நெடுமாறன், மணியரசன் ஆகியோர் கதிராமங்கலத்தில் பேரணி நடத்துகின்றனர்.



 

கடந்த 30-ம் தேதி கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கிடையே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் சில பைப் லைன்களில் திடீரெனக் கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கொப்பளித்து வெளியே வந்துகொண்டிருந்ததால், விளைநிலங்கள் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கெனவே, இந்தத் திட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்த்துவந்த நிலையில், எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது மக்களின் கோபத்தை அதிகரித்துவிட்டது.  எனவே,மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால், அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட  ஒன்பது பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.


 

இதையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, கதிராமங்கலத்தில் கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது. இன்று, 10-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் இன்று, கதிராமங்கலம் மக்களைச் சந்திக்க ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மற்றும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்  உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கதிராமங்கலம் வந்தடைந்தனர். கிராம மக்களைச் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்த அவர்கள், பேரணி நடத்திவருகின்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு