Published:Updated:

சர்ச்க்குள் சென்று அதிகாரிகள் தாக்குதல்! கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்!

சர்ச்க்குள் சென்று அதிகாரிகள் தாக்குதல்! கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்!
சர்ச்க்குள் சென்று அதிகாரிகள் தாக்குதல்! கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்!

சர்ச்க்குள் சென்று அதிகாரிகள் தாக்குதல்! கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்!

ள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சர்ச் ஒன்றில் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தவர்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் தேவாலயத்துக்கு வந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளுவர் கோட்டம் ஏழாவது குறுக்கு ரோட்டில் 'ஹெப்ரான் கேஸ்ட்ல் சர்ச்' கடந்த இருபது வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த சர்ச் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு விதிமுறை மீறிய நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தது. இன்று காலை (12-07-2017 ) எப்போதும் போல பிரார்த்தனை நடந்துக்கொண்டிருந்த வேலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் இரண்டு பெண்மணிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்ச் நிர்வாகம் தெரிவித்தது. இதனால், பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைவரும் காலை முதலே சர்ச் வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மேலும் பெண்களைத் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு