Published:Updated:

கதிராமங்கலம்,நெடுவாசல் பிரச்னைகளுக்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 'விளைந்தாலும் தற்கொலை, வறட்சியாலும் தற்கொலை' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளைத் தாங்கி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, பேரணியாகச் சென்றனர். மேலும், திருச்சி டி.வி.எஸ் டோல்கட் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மண்ணைக் காக்கப் போராடும் கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் உணர்வுகளை மதித்து அரசுகள் செயல்படவேண்டும். ஆனால் மத்திய அரசு, காவிரி டெல்டா மாவட்டங்களைக் குறிவைத்து, விவசாயத்துக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தத் துடிக்கிறது. கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார், பேராசியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், நெடுவாசல்  போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருப்பது, ஜனநாயக விரோதமான செயல். எனவே வளர்மதியின் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு