Published:Updated:

நித்யானந்தா சீடர்களால் கொந்தளிப்பு..! பரபரப்பில் காஞ்சி மடம்

JAYAVEL B
நித்யானந்தா சீடர்களால் கொந்தளிப்பு..! பரபரப்பில் காஞ்சி மடம்
நித்யானந்தா சீடர்களால் கொந்தளிப்பு..! பரபரப்பில் காஞ்சி மடம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதின மடத்தின்  232வது மடாதிபதியாக திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் இருந்து வருகிறார்.

நித்யானந்தா சீடர்களால் கொந்தளிப்பு..! பரபரப்பில் காஞ்சி மடம்

‘மடத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் தங்கியிருக்கிறார்கள். மடத்துக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்’ என எழுந்த புகாரை அடுத்து தொண்டை மண்டல ஆதீன நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெறுவதாக இருந்தது. கூட்டம் நடைபெற இருந்த நிலையில் மடம் பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டு தொண்டை மண்டல குழு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சங்க நிர்வாகிகள் ஆதீனத்தைக் காணவில்லை என சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்பு செல்போனில் மடாதிபதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, “பூஜைக்காக பெங்களூரு வந்திருக்கிறேன். ஓரிரு நாளில் காஞ்சிபுரம் வந்துவிடுவேன்“ என்று மடாதிபதி தெரிவித்தார். இதையடுத்து இந்து அறநிலைத்துறை ஆணையர் காஞ்சிபுரத்திலுள்ள மடத்துக்கு நேரடியாக சென்று நித்யானந்தா சீடர்களிடம் விசாரணை நடத்தினார்.  இந்நிலையில் பெங்களூரு சென்றிருந்த ஆதீனம் நேற்றிரவு காஞ்சிபுரம் தொண்டை மண்டல மடத்துக்கு வந்தார். “நித்யானந்தா ஆட்களை வெளியேற்றி, ஆதீனத்தை நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்“ என  அனைத்து முதலியார் சங்க அமைப்புகளும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பாக இருக்கிறது காஞ்சிபுரம்.