Published:Updated:

உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய விவசாயிகள்! டெல்லியில் இன்று 23-வது நாள் போராட்டம்

சகாயராஜ் மு
உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய விவசாயிகள்! டெல்லியில் இன்று 23-வது நாள் போராட்டம்
உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய விவசாயிகள்! டெல்லியில் இன்று 23-வது நாள் போராட்டம்

உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி விவசாயிகள் இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 23-வது நாளாக இந்தப் போராட்டம் நீடித்துவருகிறது.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் தமிழக விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கினர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று,  உடலில் இலை தழைகளைக் கட்டியபடி ஆதிவாசிகள்போல போராட்டம் நடத்தினர். 23-வது நாளான இன்று, உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி விவசாயிகள் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ''விவசாயிகளின் பிரச்னைகளை பிரதமர் நரேந்திரமோடி காதுகொடுத்துக் கேட்பதில்லை. இந்தியா, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்பாட்டில் முதலிடம் வகிக்கிறது. ஆனால், விவசாயிகள் வறுமையாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பிரச்னை தீரும் வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார்.