Published:Updated:

ஊதியத்துக்காகப் போராடும் துப்புரவுத் தொழிலாளர்கள்!

ஊதியத்துக்காகப் போராடும் துப்புரவுத் தொழிலாளர்கள்!
ஊதியத்துக்காகப் போராடும் துப்புரவுத் தொழிலாளர்கள்!

ஊதியத்துக்காகப் போராடும் துப்புரவுத் தொழிலாளர்கள்!

நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தங்களைப் பணிக்கு அமர்த்திய ஒப்பந்த நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை கடந்த
5 மாதங்களாக நகராட்சி செலுத்தாததால் தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி நகராட்சி அலுவலகம்முன் குப்பை வண்டிகளை நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஆகியவற்றில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பைகளைத் தனியாகவும் மக்காத குப்பைகளைத் தனியாகவும் பிரித்து எடுக்க வீடுதேடிச் செல்லும் துப்புரவுப் பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் மாத ஊதியம் 8 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தத் துப்புரவுப் பணிக்களுக்கான ஒப்பந்தத்தை ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டி  நடத்தி வருகிறார். இதை நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மேற்பார்வை செய்து வருகிறார்.

இந்நிலையில் நாகர்கோவில் நகராட்சியானது ஒப்பந்ததாரருக்குக் கடந்த 5 மாதங்களாக நிலுவைத்தொகையான 5 கோடி ரூபாய் வழங்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில் ராமகிருஷ்ணன் பலமுறை முறையிட்டும் நகராட்சி கண்டுகொள்ளாமல் இருந்துவந்துள்ளது. இதனால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கமுடிய நிலையில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே தங்களுக்கு கடந்த மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை எனவும்,இதனால் தங்களின் குடும்பங்கள் வறுமையில் தவிப்பதாகவும், உடனடியாக தங்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் எனவும் நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டதோடு நகராட்சியைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியதால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.  

அடுத்த கட்டுரைக்கு