Published:Updated:

ஜிஎஸ்டி-யை எதிர்த்து நள்ளிரவில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்!

ஜிஎஸ்டி-யை எதிர்த்து நள்ளிரவில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்!
ஜிஎஸ்டி-யை எதிர்த்து நள்ளிரவில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்!

ஜிஎஸ்டி-யை எதிர்த்து நள்ளிரவில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்!

ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டிப் போராடிய வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்ட பலர் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடந்த சில நாள்களுக்கு முன்னர் மத்திய அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. அதை எதிர்த்து நாடு முழுவதும் பல வணிக அமைப்புகள் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்து வந்தன. இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் அருகில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், "ஜிஎஸ்டி வரியையும் ஆன்லைன் வணிகத்தையும் முறியடிக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணமான  வர்த்தக ஒப்பந்தத்தையும் உள்நாட்டுச் சக்தியையும் முறியடித்தால்தான் நாட்டின் சுதந்திரத்தையும் சில்லறை வணிகம் உள்ளிட்ட மக்களின் சுய தொழில்களையும் காக்க முடியும். அதற்கு மக்கள் அந்நியப் பொருள்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுதந்திரத்துக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய தொழில்களையும், நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது" என்றார். இதன்பின்னர், த.வெள்ளையன் மற்றும் பிற வணிகர்களும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு