Published:Updated:

 சட்டக்கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டம்!

 சட்டக்கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டம்!
 சட்டக்கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டம்!

கதிராமங்கலம், நெடுவாசல் வட்டார விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும்  கடலூர், தஞ்சை, நாகை உட்பட டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய திட்டங்களால் பாலைவனமாக்க நினைக்கும் மத்திய அரசையும் ஓ.என்.ஜி.சி-யையும் கண்டித்து இன்று மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை  மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையில் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சட்டக்கல்லூரியிலிருந்து ஊர்வலமாகக் கிளம்பியவர்கள், மாவட்ட நீதிமன்றம் முன்பு போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மாணவர்களைக் கலைந்துபோகச் சொன்னார்கள். அதற்கு மாணவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு மாணவர்களுக்கும் போலீஸுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்பு, அவர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றினார்கள். காவல்துறையினர் தற்போது அவர்களை மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.