Published:Updated:

`வன்முறை, ஒடுக்குமுறை இல்லாமல் தீர்வு!' - உ.பி அரசின் கவனத்தை ஈர்த்த அலிகார் எஸ்.பி முனிராஜ்

போராட்டம்
போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தைக் கையாண்ட விதத்துக்காக உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. முக்கியமாக, டெல்லியில் நடைபெற்ற வன்முறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளுக்குக் கண்டனங்களும் எழுந்தன.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

ஆனால், தற்போது அதே குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தைக் கையாண்ட விதத்துக்காக உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அலிகார் மாவட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் அலிகார் மாவட்ட எஸ்.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார்.

முனிராஜ்
முனிராஜ்

மிகவும் துணிச்சல்மிக்க அதிகாரியான முனிராஜை உற்றுக் கவனித்து வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அலிகாரில் இயல்பு நிலை திரும்புவதற்காக முனிராஜை அங்கு பணியமர்த்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

யோகி ஆதித்யநாத் உற்று கவனிக்கும் தமிழக ஐ.பி.எஸ்  முனிராஜ்... பதற்றமான இடத்தில் முக்கிய அசைன்மென்ட்!

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், மொரடாபாத் - அலிகார் தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்

சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு டென்ட் அமைத்து, அதில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதனால், கிட்டத்தட்ட ஒரு வார காலம் அந்தத் தேசிய நெடுஞ்சாலை முடங்கியது.

எந்த வன்முறையும் இல்லாமல், அங்கு இயல்புநிலையைத் திரும்ப கொண்டு வர நினைத்த அலிகார் போலீஸார், போராட்டக்காரர்களிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்

அதன் பலனாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, மொரடாபாத் - அலிகார் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு