Published:Updated:

`அரசு கொடுப்பதே குறைவாகத்தான் இருக்கிறது!' - கொதிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள்

தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம்

நியாயவிலைக்கடை பணியாளர் போராட்டம்
நியாயவிலைக்கடை பணியாளர் போராட்டம் ( க. தனசேகரன் )

''ரேஷன் பொருள்கள் வழங்குவதில் எடை குறைவாக இருப்பதாகக் கூறி விற்பனையாளர்களைக் கைது செய்து பழி வாங்கப்படுகிறார்கள். ஆனால், அரசு கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களைக் குறைவாக வழங்குகிறார்கள். உதாரணத்துக்கு ஒரு ரேஷன் கடைக்கு 50 கிலோ வழங்க வேண்டிய பொருளை 40 கிலோ வழங்குகிறார்கள்.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்
க. தனசேகரன்

இதனால் 10 கிலோ குறையும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? அரசு நியாயமாக வழங்கினால் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் நியாயமாக கொடுக்கப்படும்'' என்கிறார்கள் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர்.

இதுபற்றி அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன், `நாங்கள் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம். கூட்டுறவுத்துறை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி-க்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டுமென நீண்ட நாள்களாகப் போராடி வருகிறோம். அரசு ஒரு கமிட்டியை ஏற்படுத்தியது.

நியாயவிலைக் கடைகளுக்கு ஆய்வு செய்ய வருபவர்கள், முதலில் வழங்கியது சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே விற்பனையாளர்கள் முறைகேடு பற்றிப் பேச வேண்டும்.
அரசுப் பணியாளர் சங்கம்

அந்த கமிட்டி ஆய்வு மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்தும் இன்னும் அந்த அறிக்கையை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ரேஷன் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் பொட்டலமாக வழங்க வேண்டும். பொது விநியோகப் பணிகள் முழுவதும், பயோமெட்ரிக் குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட அனைத்தும் கணினி மயமாக்கப்பட வேண்டும். பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பணிவரன்முறை செய்ய வேண்டும்.

500 குடும்ப அட்டைகளுக்குமேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்கப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகள் சொந்த கட்டடத்தில் கழிவறை வசதியோடு இருக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கும் பொருள்கள் நியாயமாக வழங்குவதில்லை. உதாரணத்துக்கு ஒரு ரேஷன் கடைக்கு 50 கிலோ வழங்க வேண்டிய பொருள்களை 40 கிலோ வழங்குகிறார்கள். இதனால் 10 கிலோ குறையும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? அரசு நியாயமாக வழங்கினால் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் நியாயமாகக் கொடுக்கும்.

நியாயவிலைக்கடை
நியாயவிலைக்கடை
க. தனசேகரன்

நியாயவிலைக் கடைகளுக்கு ஆய்வு செய்ய வருபவர்கள் முதலில் வழங்கியது சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே, விற்பனையாளர்கள் முறைகேடு பற்றிப் பேச வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்று சொல்லுவது சரியான திட்டம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகையும் மக்களின் தேவையும் வேறுபட்டு இருக்கின்றன. அதனால் ரேஷன் பொருள்கள் அந்தந்த மாநில அரசு வழங்குவது சரியானதாக இருக்கும்'' என்றார்.