Published:Updated:

`இருட்டறையில் தள்ளப்பட்ட சித்திக் கப்பனின் மகள் நான்'- சுதந்திர தினத்தில் அப்பாவுக்காகப் பேசிய மகள்

சித்திக் கப்பனின் மகள் ( azeefa twitter )

ஹத்ராஸில், ஒடுக்கப்பட்ட பெண் ஒருவர் ஆதிக்க சாதியினரால் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டு, சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் அக்டோபர் 2020-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் சித்திக் கப்பன்.

`இருட்டறையில் தள்ளப்பட்ட சித்திக் கப்பனின் மகள் நான்'- சுதந்திர தினத்தில் அப்பாவுக்காகப் பேசிய மகள்

ஹத்ராஸில், ஒடுக்கப்பட்ட பெண் ஒருவர் ஆதிக்க சாதியினரால் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டு, சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் அக்டோபர் 2020-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் சித்திக் கப்பன்.

Published:Updated:
சித்திக் கப்பனின் மகள் ( azeefa twitter )

நீங்கள் மௌனமாய் இருந்தால் இந்த உலகம் செவிடாய்தான் இருக்கும். எப்போது நீங்கள் உரக்கப் பேசுகிறீர்களோ, அப்போதே இந்த உலகம் செவி சாய்த்துக் கேட்க ஆரம்பிக்கும். சமூகத்தில் நிகழ்த்தப்பட்ட பல உரைகள் பல கிளர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் வழி வகுத்துள்ளன.

ஆனால் முதன் முறையாக, ஒரு சின்னஞ் சிறிய மகள் ஒருத்தி தன் அப்பாவுக்காக ஆற்றிய உரை, சுதந்திர இந்தியாவில் நாம் அடைந்துவிட்ட சுதந்திரம் இது தானா என நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

டெல்லியைச் சேர்ந்த மலையாள பத்திரிகையாளரான சித்திக் கப்பன், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், ஒடுக்கப்பட்ட பெண் ஒருவர், ஆதிக்க சாதியினரால் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டு, சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், அக்டோபர் 2020-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சித்திக் கப்பன் மீது பொய்யாகத் திணிக்கப்பட்ட இந்த வழக்கை விளக்கி, அவரை விடுதலை செய்யக்கோரி, கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கமும், சித்திக்கின் மனைவியும் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து போராடி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் 9 வயதான சித்திக்கின் மகள் நொட்டாபரம் ஜி.எல்.பி. அரசு பள்ளியில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பேசினார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

``அனைவருக்கும் என் இதயம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள். நான் மெஹனாஸ் கப்பன். ஒரு குடிமகனின் எல்லா சுதந்திரத்தையும் தகர்த்து, இருட்டறையில் தள்ளப்பட்ட பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் மகள்.

இந்திய மகாராஜ்ஜியம் 76-வது சுதந்திர தினத்தில் காலடி எடுத்து வைக்கிறது. காந்திஜி, நேரு, பகத் சிங் மற்றும் எண்ணற்ற புண்ணிய ஆத்மாக்களோடும், புரட்சி கதாநாயகர்களின் ஜீவ தியாகத்தின் விளைவாகவே இன்றைக்கு நாம் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

என்ன பேச வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எந்த மதத்தைத் தேர்வு செய்யவேண்டும் என இவையனைத்திலும் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்ய இந்தியருக்கு உரிமை உண்டு. தன்னுடைய அபிப்ராயத்தை வெளிப்படுத்த சுதந்திரம் உண்டு.

இறங்கிப் போ எனச் சொல்பவரோடு எதிர்த்துப் போராட உரிமை உண்டு. ஆகஸ்ட் 15-ம் தேதியன்று உயிர்த்தெழுந்த பாரத தேசத்தின் அந்தஸ்தை யாருடைய முன்னிலையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

இருப்பினும் இன்னும் சில இடங்களில் அமைதியின்மை நிலவுகிறது. மதம், வர்ணம், சாதி, அரசியல் அடிப்படையில் அக்கிரமங்கள் வெடிக்கின்றன. இவை அனைத்தையும் ஒருமித்த சிநேகத்தோடு, ஐக்கியத்தோடு களைய வேண்டும். அமைதியின்மையின் நிழலைக்கூட களைய வேண்டும். ஒருமித்த ஜீவனாய் நாம் இந்த வாழ்வை வாழ வேண்டும்.

எந்த ஒரு கலகமும் இல்லாத பிந்தைய ஒருநாளை கனவு காண வேண்டும். சுதந்திரம் வேண்டிப் போராடிய எல்லா தேசப் போராளிகளையும் நினைவு கூர்ந்து கொண்டு, இந்தியச் சாமானிய குடிமகனின் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்பதைக் கூறி நிறைவு செய்கிறேன். ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்’’ எனப் பேசியுள்ளார்.

இணையத்தில் வைரலான மெஹனாஸ் பேசிய இந்த உரைக்கு பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.