Published:Updated:

டெல்லி: மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்; ஜந்தர் மந்தரில் குவிந்த போலீஸ்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் இந்திய விவசாயிகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் இந்திய விவசாயிகள். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்திலிருக்கும் காந்தி சிலை முன்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பஞ்சாப் மாநில எம்.பி-க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கினார்கள் இந்திய விவசாயிகள். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மிகத் தீவிரமான தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாதங்கள் கடந்து நீடித்த போராட்டத்தில் எந்தத் தீர்வும் எட்டப்படாததால், அடுத்தகட்டமாக 2021, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்தினர். தடையை மீறி நடத்தப்பட்ட போராட்டம் என்பதால் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டெல்லி சலோ - விவசாயிகள் போராட்டம்
டெல்லி சலோ - விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் தீவிரமான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அரசின் பிடிவாதம் மற்றும் விவசாயிகளின் உறுதியான நிலைப்பாட்டால் முடிவு எதுவும் எட்டப்படாமல் அத்தனை பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன.

இந்தநிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கி நாடு முழுவதும் பரவியதால், விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் ஜூலை 19-ம் தேதி தொடங்கி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளும் போராட்டத்தை மீண்டும் கையிலெடுக்க முடிவெடுத்தனர். எனவே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் அதே நாளில், நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், கொரோனாவைக் காரணம் காட்டி, விவசாயிகளின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது டெல்லி காவல்துறை.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இருப்பினும், போராட்டம் நடத்துவதிலிருந்து பின்வாங்காத விவசாயிகள், 'எங்களின் போராட்டக் களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றிக்கொள்கிறோம்' என்று சொன்னதும், டெல்லி காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் உடனடியாக அனுமதி வழங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன்படி, இன்று ஜூலை 22-ம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை டெல்லி ஜந்தர் மந்தரில் காலை 11 மணிக்கு தொடங்கி ,மாலை 5 மணிக்கு முடிக்கும் வகையில் இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர். இந்தப் போராட்டத்தில் 200 விவசாயிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என டெல்லி காவல்துறையும் கட்டுப்பாடு விதித்திருந்ததுது.

இந்தநிலையில், அறிவித்தபடியே இன்று காலை டெல்லி சிங்கு எல்லையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலம் பயணம் மேற்கொண்ட விவசாயிகள் போராட்டக் களத்தை வந்தடைந்தனர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையையும் மீறி வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருக்கும் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

சரியாக 11 மணியளவில் தொடங்கிய விவசாயிகள், தங்களின் போராட்டக் களத்திலேயே `விவசாயிகள் நாடாளுமன்றம்’ என்ற மாதிரி நிகழ்ச்சியை ஏற்படுத்தி நூதனமுறையில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு