Published:Updated:

டெல்லி: ஒன்று திரண்ட ஒரு லட்சம் விவசாயிகள்; முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி மீண்டும் போராட்டம்!

விவசாயிகள் போராட்டம் ( ட்விட்டர் )

560 மாவட்டங்களிலிருந்து, 60 ஆயிரம் கிராமப்புற விவசாயிகளின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக, போராட்டத்தை நடத்தும் பாரதிய விவசாயிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

டெல்லி: ஒன்று திரண்ட ஒரு லட்சம் விவசாயிகள்; முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி மீண்டும் போராட்டம்!

560 மாவட்டங்களிலிருந்து, 60 ஆயிரம் கிராமப்புற விவசாயிகளின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக, போராட்டத்தை நடத்தும் பாரதிய விவசாயிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
விவசாயிகள் போராட்டம் ( ட்விட்டர் )

குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டிருக்கின்றனர். 560 மாவட்டங்களிலிருந்து, 60 ஆயிரம் கிராமப்புற விவசாயிகளின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக, போராட்டத்தை நடத்தும் பாரதிய விவசாயிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்
பழைய (கோப்புப் படம்)

இது குறித்து பாரதிய விவசாயிகள் சங்கத்தின் பிரசாரத் தலைவர் ராகவேந்திர பட்டேல் செய்தியாளர்களிடம், "விவசாயிகள் சந்தித்துவரும் சவால்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், நான்கு மாதங்களுக்கு முன்பு மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடங்கினோம். இதன் மூலம் 20,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறோம். 13,000 கி.மீ தொலைவுக்கு சைக்கிள் பேரணி நடத்தியிருக்கிறோம். 18,000 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அதோடு, பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பொதுக்கூட்டங்களையும் நடத்தினோம்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தற்போது டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் ஒன்று கூடியிருக்கிறோம். இங்கு அரசிடம், குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்; அனைத்து வகையான விவசாய உற்பத்திப் பொருள்களுக்கும், ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்;

மத்திய அரசு
மத்திய அரசு

மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்துவரும் தொகையை ஆண்டுக்கு 6,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; மரபணு மாற்றப் பயிர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். இந்த நான்கு கோரிக்கைகளையும் அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.