Published:Updated:

``முதல்வர் ஸ்டாலின் பயிர் பாதிப்புகளை நேரில் ஆய்வுசெய்யத் தவறிவிட்டார்” - விவசாயிகள் சாலைமறியல்!

சாலைமறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள்

``விவசாயிகள் படும் துயரை உணர்ந்த முதலமைச்சர், மழை ஏற்படுத்திய பயிர் பாதிப்பை நேரில் பார்வையிட்டு, ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்த்தோம்.'' - விவசாயிகள்

Published:Updated:

``முதல்வர் ஸ்டாலின் பயிர் பாதிப்புகளை நேரில் ஆய்வுசெய்யத் தவறிவிட்டார்” - விவசாயிகள் சாலைமறியல்!

``விவசாயிகள் படும் துயரை உணர்ந்த முதலமைச்சர், மழை ஏற்படுத்திய பயிர் பாதிப்பை நேரில் பார்வையிட்டு, ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்த்தோம்.'' - விவசாயிகள்

சாலைமறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் பருவம் தவறிய தொடர்மழை பெய்தது. இதில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதேபோல் கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர் ஊரணிபுரத்தில் விவசாயிகள் சாலைமறியல்
தஞ்சாவூர் ஊரணிபுரத்தில் விவசாயிகள் சாலைமறியல்

பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அரசு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோரை பயிர் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று அமைச்சர்கள், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பல ஊர்களுக்குச் சென்று ஆய்வுசெய்தனர். விவசாயிகளிடம் பயிர் பாதிப்பின் இழப்பு குறித்துக் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், இன்று தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஊரணிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக மறியல் போராட்டம் நடத்தினர்.

அழுகிய நெற்கதிர்களுடன் விவசாயிகள்
அழுகிய நெற்கதிர்களுடன் விவசாயிகள்

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து விவசாயிகள் நலச்சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னத்துரை, ``கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடையான திருவோணம், பேராவூரணிப் பகுதிகளிலும் பெரும் பாதிப்பு உண்டானது. பயிர் பாதிப்பைப் பார்வையிட்டு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துவந்தோம். இந்த நிலையில், ஆய்வுசெய்த அமைச்சர் சக்கரபாணி எங்கள் பகுதிக்கு வரவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகளும் கணக்கீட்டில் அலட்சியம் காட்டினர்.

சாலை மறியல்
சாலை மறியல்

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயிகள் படும் துயரை உணர்ந்த அவர், மழை ஏற்படுத்திய பயிர் பாதிப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அதைச் செய்ய முதலமைச்சரும் தவறிவிட்டார்.

தன் தந்தை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குக் கடலில் பேனா நினைவுக்ஷ்சின்னம் அமைக்கும் முயற்சியில் இருக்கும் ஸ்டாலின், தன் சொந்த மாவட்ட விவசாயிகள் துயரில் இருப்பதைப் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கத் தவறியது வேதனையளிப்பதாக இருக்கிறது. இதைக் கண்டிக்கும்விதமாக அழுகிய பயிர்களுடன், கோஷங்கள் எழுப்பி நூற்றுக்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினோம். பாதிப்புகளை முறையாகக் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.