Published:Updated:

"தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவோம்"- சீர்காழியில் மீனவர்கள் ஆவேசப் போராட்டம்!

போராட்டம்
போராட்டம்

சென்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

சீர்காழி அருகே சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி மூன்றாவது நாளாக 21 மீனவக் கிராமங்களில்  போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகளின்  பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி மீனவ மக்கள் தங்களின் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகளைச் சாலையில் கொட்டியதால் பதற்றம் நிலவுகிறது. எனவே அந்தப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள  கடலோர மீனவக்  கிராமங்களில் சுருக்குமடி வலைகளைப்  பயன்படுத்த அனுமதி கோரி 21 கிராம மீனவர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், மடவாமேடு பழையாறு ,சந்திரபாடி உள்ளிட்ட கிராம பிரதிநிதிகள் கூறுகையில் " போராட்டம் தொடரும் எனவும் அந்தந்த கிராமங்களிலிருந்து நடைபயணமாக சென்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை  ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர். இதனையறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடர்வதாகவும்,  நடை பயணமாகச் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம்  சென்று அடையாள அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி  திருமுல்லைவாசல் கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான  மீனவர்கள் பேரணியைத் தொடங்கினர். சீர்காழி தாலுகா முழுவதுமாக பதற்றம் நிலவுவதால் காவல் துணை  கண்காணிப்பாளர் லாமெக் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு , பேரணியை வழிமறித்துத் தடுத்தனர். இதனால் வெகுண்டெழுந்த மீனவர்கள் திருமுல்லைவாசல் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்

பின்னர் மீனவர்கள் மூவாயிரம் பேரின் ஆதார் அட்டைகள் , ரேசன் கார்டுகளை சாலையில் வீசிச் சென்றனர். அதனை வருவாய்துறை அதிகாரிகள் மூட்டை கட்டி எடுத்து சென்றனர். பின்னர் சாலை மறியலை  விலக்கிக் கொண்டவர்கள் நாளை முதல் சுருக்குமடி வலைகளைப்  பயன்படுத்தி  மீன்பிடிக்க கடலுக்குச்  செல்ல போவதாகத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு