Published:Updated:

சிவகங்கை: போலீஸைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

நீதிபதி போராட்டம்
நீதிபதி போராட்டம்

புகார்மீது வழக்கு பதிவு செய்து, `குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை எழுப்பிய நிலையில், காவல்நிலைய ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த பூலாங்குறிச்சியைச் சேர்ந்தவர் செந்தில். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாலையில் நடந்து சென்றபோது, முன்விரோதம் காரணமாக பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து நடு ரோட்டில் செந்திலையும் அவர் மனைவி பிரியதர்ஷினியையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் செந்திலுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார்.

முன்னாள் நீதிபதி
முன்னாள் நீதிபதி

இதையடுத்து செந்திலின் உறவினர்கள் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால், சம்பவம் நடந்து 20 நாள்களுக்கு மேலாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், பூலாங்குறிச்சி காவல்துறையினரைக் கண்டித்து, அதே ஊரில் வசித்துவரும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் தலைமையில், காவல் நிலையம் முன்பு செந்தில் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை: 6 நாள் போராட்டம்! - நாளை நல்லதொரு விடியல் பிறக்குமா ஸ்விக்கி ஊழியர்களுக்கு?

அவர்கள், `புகார்மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை எழுப்பிய நிலையில், காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. `உயர் நீதிமன்ற நீதிபதியின் உறவினர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். முன்னாள் நீதிபதி போராட்டத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி போராட்டம்
நீதிபதி போராட்டம்

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``முன்விரோதம் காரணமாகச் சண்டையிட்டுக்கொண்ட இருவருமே ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்குள் ஏற்பட்ட உறவுப் பகையை வெளியில் கொண்டுவருகின்றனர். கொரோனா காலகட்டத்திலும் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளோம். வழக்கின் முக்கியம் எப்படி என்பதன் அடிப்படையில்தான் செயல்பட்டுள்ளோம். இந்த இரு தரப்பினர்மீதும் தவறுகள் உள்ளன. நாங்கள் யாருக்கும் சாதகமாகச் செயல்படவில்லை" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு