Published:Updated:

`அவதூறாகப் பேசியவர் அ.தி.மு.க நிர்வாகி; தண்டனை எங்களுக்கா?' - கொதிக்கும் ஊராட்சி செயலர்கள்

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

காவல்துறையைக் கண்டித்து ஊராட்சி செயலர்கள் போராட்டம்

போராட்டம்
போராட்டம்

பணம் தராமல் வேலையைத் தொடங்கினால் வெட்டிவிடுவேன் எனக் கூறி ஒரு சாதியினரை மிரட்டியும், அவதூறாகவும் பேசிய அ.தி.மு.க பிரமுகரை விட்டுவிட்டு ஊராட்சி செயலரைக் கைது செய்த காவல்துறையினரைக் கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

`இனி ஓ.பி.எஸ் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பேன்!'- ஆண்டிபட்டி எம்.எல்.ஏ கொந்தளிக்க என்ன காரணம்?
ஊராட்சி செயலர்கள்
ஊராட்சி செயலர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. அ.தி.மு.க பிரமுகரான இவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், ``நான்தான் எம்.எல்.ஏ. எனக்கு பணம் தராமல் யாராவது ஊரணியைத் தொட்டால் கையை இரண்டாக வெட்டிவிடுவேன். போலீஸையும் பார்க்க மாட்டேன். யாரையும் பார்க்க மாட்டேன். நீயாக இருந்தாலும் கேஸ் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன். கோடி கோடியாக சம்பாதித்து வைத்துள்ளேன். பணத்தைக் கொடுத்தால்தான் வேலையைத் தொட முடியும். யாராக இருந்தாலும் கையை ஒடித்துவிடுவேன்'' எனப் பேசியிருந்தார்.

`உடனே அறிவித்தால் கூட்டம் எப்படி வரும்?' - ப.சிதம்பரம் கைது போராட்டம் குறித்து விஜயதரணி

மறுமுனையில் பேசிய ராமசுப்பு என்ற ஊராட்சி செயலர் காலையில் பணம் தருகிறேன் எனப் பேசினார். மேலும், அ.தி.மு.க பிரமுகர் அதில் சாதிய வன்மத்துடன் பேசியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களிலும் பரவியது. பின்னர் தான் பேசவில்லை எனக் கூறி அந்த ஆடியோ சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார்.

போராட்டம்
போராட்டம்

இந்நிலையில் சாதிய வன்மத்துடன் பேசியது தொடர்பாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலர் ராமசுப்புவை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர்கள், ``அவதூறாகப் பேசிய அ.தி.மு.க பிரமுகரை கைது செய்யாமல் ஊராட்சி செயலரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தவறு செய்தவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் தப்பித்துவிடுகிறார். தவறு செய்யாத நாங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? காவல்துறையினர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகின்றனர்'' எனக் கூறி வத்திராயிருப்பு ஒன்றிய ஊராட்சி செயலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.