Published:Updated:

கரூர்:`தடுப்பூசி போட கட்டாயப்படுத்துகிறார்கள்!' - அங்கன்வாடிப் பணியாளர்கள் தர்ணா

 தர்ணா போராட்டத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள்
தர்ணா போராட்டத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள்

`விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடாது’ - அங்கன்வாடிப் பணியாளர்கள்.

`கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்தி போட்டுக்கொள்ள சொல்கிறார்கள்' என்று கூறி, கரூர் மாவட்டத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து
96 வயது மூதாட்டிக்கு குடல் இறக்க நோய் அறுவை சிகிச்சை... சாதித்த கரூர் அரசு மருத்துவமனை!

அங்கன்வாடிப் பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் என கரூர் மாவட்டத்திலுள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் சேர்த்து, 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகின்றனர். கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு, கரூர் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்த முகாம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அதோடு, கரூர் தான்தோன்றிமலை வட்டார அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. கடந்த 16-ம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி போடும் பணிகளில் அங்கன்வாடிப் பணியாளர்களில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், மீதமுள்ள பணியாளர்களையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு உயரதிகாரிகள் நிர்பந்திப்பதாகக் கூறி, அங்கன்வாடி ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பின்னர், தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லாதவர்கள் எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுக்க வற்புறுத்தப்பட்டதால், அவர்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாந்தி
சாந்தி

இது குறித்துப் பேசிய, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் சாந்தி, ``கொரோனா வைரஸ் பாதிக்கப்படாமல் அனைவரும் காக்கப்பட வேண்டும்தான். ஆனால், விருப்பமுள்ளவர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். விருப்பம் இல்லாதவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உடல்நிலை மற்றும் வயோதிகம், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால், அவர்களுக்குக் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடாது" என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு