Published:Updated:

‘உணவு வேண்டாம்.. சொந்த ஊர்களுக்கு போக வேண்டும்!’- மும்பை பந்த்ராவில் குவிந்த மக்கள்

மும்பை
News
மும்பை

முக கவசங்கள், சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் மக்கள் சாலைகளில் கூடியது மகாராஷ்டிரா அரசுக்கு பெரும்சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறாமல் இருப்பதற்காகதான் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊடரங்கு உத்தரவு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான். கூலிக்காக வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது கைகளில் இருந்த சிறிய சேமிப்பு தொகையை கொண்டு இந்த 21 நாள் ஊரடங்கை கடந்துவிட்டனர். ஊரடங்கு தளர்த்தப்படும் நாம் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிடலாம் என நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு பிரதமர் அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மோடி
மோடி

இந்நிலையில் தான் மும்பையின் பந்த்ரா பகுதியில் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென இன்று மாலை போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் எல்லாம் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. எங்களுக்கு வேலையும் இல்லை உணவும் இல்லை. உடனடியாக ரயிலை இயக்குங்கள் எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள் எனக் கூறி போராட்டத்தில் இறங்கினர். கொரோனா சமூகப்பரவலாகாமல் இருப்பதற்குதான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முக கவசங்கள், சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் மக்கள் சாலைகளில் கூடியது மகாராஷ்டிரா அரசுக்கு பெரும்சங்கடத்தை ஏற்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொழிலாளர்கள் சிலர் பேசுகையில்,’ தன்னார்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு உணவுகளை வழங்குகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புகிறோம். எங்களுக்கு இப்போது உணவு வேண்டாம். நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். ஊரடங்கு உத்தரவு நீட்டித்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எங்களுடைய சேமிப்புகள் அரசு அறித்த அந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவுகளிலே காலியாகிவிட்டது. சாப்பிடுவதற்கு கூட வழியில்லை. நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு போக விரும்புகிறோம். அரசாங்கம் அதற்கான வசதியை செய்துதர வேண்டும்” என்றனர்.

மோடி
மோடி

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து போலீஸார் அங்கிருந்தவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “பந்த்ரா ரயில் நிலைய பகுதியில் 1000க்கும் மேற்பட்ட தினக்கூலிகள் குவிந்துவிட்டனர். இவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள். நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு போக வேண்டும் போக்குவரத்தை ஏற்படுத்தி தாருங்கள் என கோரி போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3 மணிக்கு தொழிலாளர்கள் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர். 5 மணி வாக்கில் தடியடி நடத்திய போலீஸார் போராட்டக்காரர்களை கலைத்தனர். தற்போது அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா அமைச்சர் அஸ்லாம் ஷேக் பேசுகையில், “உணவுக்கெல்லாம் இங்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை. அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களும் வழங்கப்பட்டு விட்டது. ஊரடங்கு நீட்டித்தது தான் அவர்களது பிரச்னை” என்றார்.

மும்பை
மும்பை

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பேசுகையில், “ மும்பையில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்படலாம் நாம் அனைவரும் ஊருக்கு திரும்பிவிடலாம் என அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இவர்கள் இங்கிருந்து சொந்த ஊர்களுக்கு நோயுடன் செல்லப்போகிறார்களா. பந்த்ரா ரயில்நிலையத்தில் ஒன்று கூடிவிட்டால் பிரதமர் மோடி மாநில எல்லைகளை திறக்க உத்தரவிடுவார் என தொழிலாளர்கள் நினைத்திருக்க கூடும்:” எனத் தெரிவித்துள்ளார்.