Published:Updated:

`ஆட்சியே போனாலும் கவலையில்லை; குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்!'- கொந்தளித்த நாராயணசாமி

நாராயணசாமி
நாராயணசாமி

``இந்தியாவை இந்துத்துவா நாடாக்க வேண்டுமென்ற பா.ஜ.க-வின் முயற்சி பலிக்காது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

இந்திய குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும், ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியிருக்கிறது. அனல் பறக்கும் விவாதங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குடியுரிமைச் சட்டம்
குடியுரிமைச் சட்டம்
அ.குரூஸ்தனம்

குறிப்பாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிவசேனா, காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன.

அதன்படி புதுச்சேரியில் இன்று தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் நாராயணசாமி, ``மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமைச் சட்டம் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சட்டம். இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி இந்தியாவை இந்துத்துவா நாடாக்க வேண்டுமென்று பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. ஆனால், அது ஒருபோதும் பலிக்காது.

தி.மு.க காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தி.மு.க காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

உயிரே போனாலும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் இந்தச் சட்டத்தை தன்னுடைய மாநிலத்தில் அமல்படுத்த விடமாட்டேன் என்றும் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். அதுபோல எங்கள் புதுச்சேரி மாநிலத்திலும் இந்தியக் குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால் எங்கள் ஆட்சியே போனாலும் அதைப்பற்றி கவலையில்லை" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு