Published:Updated:

`அரசு சமத்துவத்தைக் கையாள வேண்டும்!' -சேலத்தில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் இஸ்லாமியர்கள்

தர்ணா...
தர்ணா... ( எம்.விஜயகுமார் )

இந்தத் தர்ணா போராட்டம் சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரே கோட்டை மைதானத்திற்கு அருகில் நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியது. அதையடுத்து இந்தக் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் புதிய வடிவத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றும் வரை கால வரையற்ற தர்ணா போராட்டத்தில் இஸ்லாமியப் பெண்களும் ஆண்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தத் தர்ணா போராட்டம் சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரே கோட்டை மைதானத்திற்கு அருகில் நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

நசீரா பர்வின்
நசீரா பர்வின்
எம். விஜயகுமார்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நசீரா பர்வின், ``சி.ஏ.ஏ., என். ஆர்.சி., இரண்டையும் எதிர்த்து ஜனநாயக முறைப்படி அமைதி வழியில் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய எங்க சகோதர, சகோதரிகளை காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் குடிமக்களுக்கு எதிராகத் செயல்படும் போது மக்கள் தன்னெழுச்சியாக வந்து போராடுவது ஜனநாயகத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை. அந்த உரிமையின் அடிப்படையில் போராடியிருக்கிறார்கள். அவர்களை எதற்காகக் காவல்துறையினர் அடித்தார்கள்.

ஜனநாயக நாட்டில் போராடக் கூடாதா? எங்கள் சகோதர, சகோதரிகளை தாக்கிய காவல்துறை மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தீர்மானம் நிறைவேற்றும் வரை நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.

சையத் முசா
சையத் முசா
எம்.விஜயகுமார்

இதுபற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேலம் மாவட்ட தலைவர் சையத் முசா, ``இந்தப் போராட்டம் அனைத்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் சார்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகச் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே இந்தத் தர்ணா போராட்டத்தைக் கைவிடுவோம். தீர்மானம் நிறைவேறாத போது இந்தப் போராட்டம் தொடரும்.

அதனால் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படாமல் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் வந்ததாகச் சொல்லும் அ.தி.மு.க அரசு சமத்துவத்தைக் கையாள வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு