Published:Updated:

``பொதுத்தேர்வு முறை குலக்கல்வித் திட்டத்துக்கு வழிவகுக்கும்!''- வேல்முருகன் கண்டனம்

10 வயதில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு ஒரு மன நெருக்கடியைக் கொடுக்கும். ஒருவேளை, தேர்வில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டால், அதை எதிர்கொண்டு மீண்டு வரும் மன ஆற்றல் அந்த வயதில் அவர்களுக்கு இருக்காது.

Velmurugan
Velmurugan

''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது மீண்டும் குலக்கல்வித் திட்டத்துக்கு வழிவகுக்கும் செயல்'' எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Tvk protest
Tvk protest

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாள்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது. இந்தத் திட்டம், இந்த ஆண்டு முதல் அமலானாலும், மூன்று ஆண்டுகளுக்குத் தேர்ச்சியைத் தடைசெய்ய வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு, கல்வியாளர்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

"ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்!" - விக்னேஷ்வரன் கோரிக்கை

அந்தவகையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் புதிய கல்விகொள்கையைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியபோது, ''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது மீண்டும் குலக்கல்வி திட்டத்துக்கே வழிவகுக்கும். பல குழந்தைகள் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழல்தான் இதுபோன்ற தேர்வுகளால் உருவாகும். '16 வயது வரையில் குழந்தைகள் மழலை மனதோடுதான் இருப்பார்கள்' என்பதுதான் குழந்தைகள் உளவியல் ஆலோசகர்கள் சொல்லும் கருத்து.

Tvk protest
Tvk protest

10 வயதில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு மன நெருக்கடியைக் கொடுக்கும். ஒருவேளை, தேர்வில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டால், அதை எதிர்கொண்டு மீண்டு வரும் மன ஆற்றல் அந்த வயதில் அவர்களுக்கு இருக்காது. மீண்டும் பள்ளிக்குச் சென்று படிக்கக் கூச்சப்படுவார்கள்.

இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைக் குழந்தைகள்தாம். அவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் ஒரு செயல்தான் இந்தத் தேர்வு முறை. பெரியாரின் பெயரைப் பயன்படுத்தும், அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் அ.தி.மு.க, இந்தத் தேர்வு முறைகளை ஏற்கக்கூடாது'' என்றார் அவர்.