Published:Updated:

`ரூ.50,000 கோடி; 6 கோடி முதலீட்டாளர்கள்!' - சென்னை செபிக்கு அதிர்ச்சிகொடுத்த மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செபி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
செபி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

இதுவரை 1,13,352 முதலீட்டாளர்களுக்குத் தலா 2,500 ரூபாய் வீதம் திருப்பித் தரப்பட்டுள்ளதாக செபி தெரிவிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குறைந்த தொகைக்கு வீட்டு மனை வழங்குவதாகச் சொல்லி, மக்களிடம் நிதி திரட்டிய நிறுவனம், பி.ஏ.சி.எல் சாமான்ய மக்கள் இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் பணத்தைக் கட்டிவந்தார்கள். ராஜஸ்தான் மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த பி.ஏ.சி.எல் நிறுவனம், 30 ஆண்டுகளில் 5.5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 49,100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

பணம்
பணம்

சுமார் 6 கோடி சாமான்ய மக்கள் முதலீடு செய்த இந்த நிறுவனம், முதிர்ச்சித் தொகையை வழங்காமல், நாடு முழுவதும் இருந்த அதன் கிளைகளை மூட ஆரம்பிக்க, பிரச்னை தொடங்கியது. பணம் தராமல் மோசடி செய்யப்பட்டோம் எனப் புகார்கள் பல ஆயிரங்களைத் தாண்டியபோது, அந்த நிறுவனத்தின் நடவடிக்கையை முடக்கியது செபி.

அடுத்ததாக, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனைசெய்யும் வேலையில் இறங்கியது. இந்த விற்பனையின்மூலம் திரட்டிய தொகையிலிருந்து முதலீட்டாளர்களுக்குத் தலா ரூ.2,500 ரூபாயைத் திருப்பித்தர செபி முடிவுசெய்தது.

போராட்டம்
போராட்டம்

இதுவரை 1,13,352 முதலீட்டாளர்களுக்குத் தலா 2,500 ரூபாய் வீதம் திருப்பித் தரப்பட்டுள்ளதாக செபி தெரிவிக்கிறது. எனினும் யாருக்கும் முழுமையாகப் பணம் திருப்பித் தரப்படவில்லை. இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் இருக்கும் செபி அலுவலகம் முன்பு மாநிலம் முழுவதிலும் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வந்திருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியபோது, ``6 கோடி மக்கள் பணத்தை இழந்துட்டு நிக்கிறோம். கம்பெனிய நிறுத்தி 6 வருஷம் ஆச்சு... இன்னும் பணம் தரல. கொஞ்சம் கொஞ்சம் சேத்த பணம் மொத்தமும் போயிடிச்சு” என்று கலங்கினர். மேலும், ஒரு முடிவு கிட்டாமல் இங்கிருந்து புறப்பட்ட மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

Vikatan

மேலும், கடந்த ஒரு மாத காலமாகவே இந்தப் போராட்டத்துக்குத் தயாராகி வந்துள்ளனர். இந்த முறை பணத்தைப் பெறாமல் வீடு திரும்ப மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், பணத்தைத் தர 50 நாள்கள் ஆனாலும் இங்கேயே இருப்போம். பணத்தை வாங்காமல் செல்ல மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

சி.ஐ.டி.யூ அமைப்பைச் சேர்ந்த சிலரும் பி.ஏ.சி.எல் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலரும் செபி அலுவலகத்துக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வெளியே போராடிய மக்களிடம் போலீஸார் சமாதானம் பேசினர். ஆனால், காத்திருப்புப் போராட்டத்தில் உறுதியாக இருந்தனர் பாதிக்கப்பட்டவர்கள். சிலர், டெல்லி சென்று போராட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

செபி
செபி

இதற்கிடயே செபி அதிகாரிகளிடம் பேசும்போது, வரும் 31 -ம் தேதிகுள் செபி இணையதளத்தில் முதலீடு செய்த பத்திரம், பான் எண் உள்ளிட்டவற்றை பதிவுசெய்பவர்களுக்கு, ஆவணங்களை சரிபார்த்து பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

இந்நிலையில், செபி அலுவலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், ஒரு மாத காலத்தில் பணத்தைப் பெற்றுத் தருவோம் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு