Published:Updated:

``மதுரைக்காரன் சொன்னால் மட்டும் கிண்டலா..?!" - செல்லூர் ராஜு காட்டம்

செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்பாட்டம்

`வைகையில் தெர்மாகோல் திட்டத்தை பொறியியல் வல்லுநர்கள் செயல்படுத்திய விதம் தவறுதான். அப்போது அதை கிண்டல் செய்தார்கள். ஆனால், மின்சாரக் கம்பியில் அணில் சென்றதாக அமைச்சர் சொன்னதை மட்டும் யாரும் கிண்டல் செய்யவில்லை.' - செல்லூர் ராஜு

``மதுரைக்காரன் சொன்னால் மட்டும் கிண்டலா..?!" - செல்லூர் ராஜு காட்டம்

`வைகையில் தெர்மாகோல் திட்டத்தை பொறியியல் வல்லுநர்கள் செயல்படுத்திய விதம் தவறுதான். அப்போது அதை கிண்டல் செய்தார்கள். ஆனால், மின்சாரக் கம்பியில் அணில் சென்றதாக அமைச்சர் சொன்னதை மட்டும் யாரும் கிண்டல் செய்யவில்லை.' - செல்லூர் ராஜு

Published:Updated:
செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்பாட்டம்

விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக பெத்தானியாபுரத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது,

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"ஒரு படத்தில் வடிவேலு காலையில் பயபக்தியுடன் வேலைக்குக் கிளப்பிவிட்டு, இரவில் மது அருந்திவிட்டு வந்து அட்டகாசம் செய்வார்.

அதுபோல வாக்குச் சேகரிக்கும்போது பயபக்தியுடன் வந்த தி.மு.க-வினர் தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தல் நேரத்தில் தி.மு.க-வினர் அளித்த வாக்குறுதி ஒன்று, நடப்பது ஒன்றாக உள்ளது. தி.மு.க ஆட்சியில் விலைவாசி வேகமாக உயர்கிறது. கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்த மதுரையைச் சேர்ந்தவர் தற்போது அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை எளிய மக்களின் நிலை தெரியுமா? அதனால்தான் விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது.

செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்பாட்டம்
செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்பாட்டம்

அதே நேரம், அம்மா ஆட்சியிலும், எடப்பாடியார் ஆட்சியிலும் அப்படி நடக்கவில்லை. யாரும் பசியோட இருக்கக் கூடாது என்பதால் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தார்கள்.

புரட்சித் தலைவர் எப்படி சத்துணவு கொண்டு வந்தாரோ, அதைப்போல் அம்மா, அம்மா உணவகம் கொண்டுவந்து நற்பெயரை பெற்றார். அ.தி.மு.க ஆட்சியில் பொங்கலுக்குப் பணம், பொருள் என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் வழங்கினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல் எடப்பாடியார் மருத்துவக்கல்லூரியில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்து நல்ல திட்டத்தை கொண்டுவந்தார்.

நகைக் கடன் தள்ளுபடி செய்வோம், அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டனர். பெண்களுக்கு இலவசப் பேருந்து என கூறிவிட்டு சில பேருந்துகளை மட்டும் இயக்குகிறார்கள். இப்போது சொத்து வரியை அதிகப்படுத்தியுள்ளனர்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

குடும்பத்தோடு சுற்றுலா சென்றார்கள். நீட் தேர்வு விலக்கு, 7 தமிழர் விடுதலை என்ன ஆச்சு? தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் பசி பட்டினிதான் ஏற்படும்.

வைகையில் தெர்மாகோல் திட்டத்தை பொறியியல் வல்லுநர்கள் செயல்படுத்திய விதம் தவறுதான். அப்போது அதை கிண்டல் செய்தார்கள். ஆனால், மின்சாரக் கம்பியில் அணில் சென்றதாக அமைச்சர் சொன்னதை மட்டும் யாரும் கிண்டல் செய்யவில்லை. மதுரைக்காரன் சொன்னால் மட்டும் கிண்டலா?

தி.மு.க ஆட்சியில் பாலியல் தொல்லை, கட்ட பஞ்சாயத்துகள் அதிகரித்துவிட்டன. போலீஸுக்கே ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க-வினர் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism