Published:Updated:

குடியுரிமை சட்டம்... மாணவர் போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறை! மக்கள் சொல்லும் தீர்வு என்ன? #VikatanPollResults

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் நடக்கும் மாணவர் போராட்டம்... ஒடுக்கும் காவல்துறை! இந்தப் பிரச்னைக்கு மக்கள் கூறும் தீர்வு என்ன? #VikatanPollResults

பல்கலைக்கழக மாணவர்கள்
பல்கலைக்கழக மாணவர்கள் ( Twitter )

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து ஆகியவற்றிலும் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மாணவர்கள் மத்தியிலும் பெரிய எதிர்ப்பலை உருவாகி பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். இதற்கு காரணம் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீஸார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுதான். தொடர்ந்து நிலவும் இந்த அசாதாரண சூழலுக்கு தீர்வாக மக்கள் எதைப் பார்க்கிறார்கள்? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்...

பல்கலைக்கழக வளாகத்தில்  நுழைந்தது ஏன்? - சர்ச்சையும் டெல்லி போலீஸின் விளக்கமும் #JamiaProtest

குடியுரிமை சட்ட எதிர்ப்பு; மாணவர் போராட்டம்... ஒடுக்கும் காவல்துறை! இதன் தீர்வு என்ன? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியாக கட்டுரைக்கு கிடைத்த மக்களின் பதில்கள்...

Jamia #VikatanPollResults
Jamia #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Jamia #VikatanPollResults
Jamia #VikatanPollResults

விகடனின் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Jamia #VikatanPollResults
Jamia #VikatanPollResults

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Jamia #VikatanPollResults
Jamia #VikatanPollResults

மொத்தத்தில், 'சட்டம் ரத்துதான் தீர்வு' என 62.2% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, 15.18% பேர் 'மாணவர்கள் போராடக்கூடாது' என்றும் 14.8% பேர் 'அரசு தலையிட வேண்டும்' என்றும் கூறியுள்ளனர்.

Jamia #VikatanPollResults
Jamia #VikatanPollResults
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமெண்டில் பதிவு செய்யுங்கள்.