Published:Updated:

புதுச்சேரி: ``விவசாயிகளுக்கு 4,000 கறவைப் பசுக்கள்!” – பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

முதல்வர் ரங்கசாமி | பட்ஜெட் உரை
News
முதல்வர் ரங்கசாமி | பட்ஜெட் உரை

மானிய விலையில் 4,000 கறவைப் பசுக்கள், 5,000 பேருக்கு இலவச தோட்டக்கலை இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை 2022-23 பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி: ``விவசாயிகளுக்கு 4,000 கறவைப் பசுக்கள்!” – பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

மானிய விலையில் 4,000 கறவைப் பசுக்கள், 5,000 பேருக்கு இலவச தோட்டக்கலை இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை 2022-23 பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி | பட்ஜெட் உரை
News
முதல்வர் ரங்கசாமி | பட்ஜெட் உரை

புதுச்சேரி 2022-23 பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``மாநில பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவர். விளை நிலங்களில் பல்வேறு வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டியதாக உள்ளது. விவசாய நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடியில் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, "என் வீடு என் நிலம்" என்ற திட்டத்தின்கீழ் ரூ.5,000/- மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள், விதைகள், நாற்றுகள், தோட்டக்கலை கருவிகள், நிழல் வலை ஆகியவை உள்ளடங்கிய தொகுப்பு 15 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு பாசிக் நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரி

இந்த ஆண்டில் சுமார் 5,000 தொகுப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், பன்முக வேளாண்மை வாயிலாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகளை 50% மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்துறைக்காக ரூ.137.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மத்திய வன நாற்றாங்கால் மேம்படுத்தப்படும். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அட்டவணை 1 இனமான "ஆலிவ் ரிட்லி" ஆமைகளை பாதுகாக்க, புதுச்சேரி கடற்கரை ஓரத்தில் ஐந்து கடல் ஆமைக் குஞ்சு பொறிப்பகங்கள் அமைக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயம்புத்தூரில் உள்ள காடுகள் மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்துடன் இணைந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு "வன அறிவியல் மையங்கள்" அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பல்லுயிர்ச் சட்டம் பகுதிகளில் அமைக்க 2002-ஐ செயல்படுத்தும் பொருட்டு தேசிய பல்லுயிர் ஆணையத்தின்கீழ் உள்ளாட்சி அமைப்புகளில் "பல்லுயிர் மேலாண்மை குழுக்கள்" அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலாண்மை மற்றும் மரம் சார்ந்த தொழில் வழிகாட்டுதல்கள் 2021-ன்படி, புதுச்சேரிப் பிராந்தியத்தில், மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகளின் வழங்கல் மற்றும் தேவை குறித்து அறிவியல் ஆய்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலான ஊரக மக்களின் வாழ்வாதாரத்திற்கு கால்நடைகள் முக்கிய காரணமாக திகழ்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

கறவை மாடுகள் | கோப்புப் படம்
கறவை மாடுகள் | கோப்புப் படம்

என் அரசு, பால் உற்பத்தியை பெருக்கி, அதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேலும் அதிகரிக்க, சிறந்த மரபணு கொண்ட கலப்பின கிடேரிக் கன்றுகளை மட்டுமே உருவாக்கும் பொருட்டு, இனம் பிரிக்கப்பட்ட உறைவிந்துகளை வாங்கும் செயல் திட்டத்தை தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி உதவியுடன், தொலைபேசி சேவையுடன் கூடிய நடமாடும் கால்நடை சிகிச்சை 60LDWILD (Mobile Veterinary Clinic with Call Centre facility), தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 90 விழுக்காடு மானியத்துடன் ஆடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். புதுச்சேரி ஆட்சிப்பரப்பில், ஆர்வமுள்ள பொதுப்பிரிவு விவசாய பயனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும், மற்றும் அட்டவணைப் பிரிவு விவசாய பயனாளிகளுக்கு 33% மானியத்திலும் 4,000 கறவைப் பசுக்கள் வழங்கப்படும்.

புதுச்சேரி ஆட்சிப்பரப்பில் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்த 500 பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடைத் துறையின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் கோழிப் பண்ணைகள் அமைக்க, ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுனர்களைக் கொண்டு, இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை தொழில்நுட்பத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். தொழில்முனைதலை உருவாக்குதல் மற்றும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துதல் (EDEG) என்ற திட்டத்தின்கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த முதல்வர் ரங்கசாமி
பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த முதல்வர் ரங்கசாமி
KURUZ THANAM A

இளங்கலை பட்டப்படிப்பு (விலங்கியல் அறிவியல்) மாணவர்கள் பயனடையும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் 20 இடங்களுடன் கூடிய புதிய முதுகலை பட்டப்படிப்பு (உயிரி அறிவியல்) ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RIVER) தொடங்கப்படும். கிரிராஜா கோழிகள் தொடர்ந்து வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இந்த வருடமும் விற்பனை செய்யப்படும். ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (RIVER) நாட்டுக்கோழி இனங்களான கடக்நாத் மற்றும் அசீல் ஆகியவற்றை பாதுகாக்க சிறப்பு பிரிவினை அமைத்துள்ளது. இந்த பிரிவில் கோழிக் குஞ்சுகள் ஒருநாள் வளர்க்கப்பட்டு அதனை கோழி வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்