Published:Updated:

காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்குக் கப்பல் சேவை..! புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

பட்ஜெட் வாசிக்கும் முதல்வர் ரங்கசாமி
News
பட்ஜெட் வாசிக்கும் முதல்வர் ரங்கசாமி ( KURUZ THANAM A )

``புதுவை காவல் துறையை வலுப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்'' என பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி..!

காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்குக் கப்பல் சேவை..! புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

``புதுவை காவல் துறையை வலுப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்'' என பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி..!

Published:Updated:
பட்ஜெட் வாசிக்கும் முதல்வர் ரங்கசாமி
News
பட்ஜெட் வாசிக்கும் முதல்வர் ரங்கசாமி ( KURUZ THANAM A )

புதுச்சேரி சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் காலை தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து பேரவை நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார். அதையடுத்து 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ``பிரதமர் மோடியின் நோக்கப்படி, வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகிய துறைகளில் பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதிலும், எனது அரசு பல நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2022-23-ம் நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடியாகும். மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாகும்.

பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த முதல்வர் ரங்கசாமி
பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த முதல்வர் ரங்கசாமி
KURUZ THANAM A

மேலும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியைக் கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்சிப் பரப்பில் 31.3.2022 வரை மொத்த நிலுவைக்கடன் ரூ.9,859.20 கோடி ஆகும். அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்த செலவிடப்படுகிறது” என்றார்.

அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 10 ஆண்டு பணிபுரிந்தவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். புதுவை காவல்துறையை வலுப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும். புதிதாக 48 சப் இன்ஸ்பெக்டர்கள், 307 காவலர்கள், 415 ஊர்க்காவல்படையினர், 200 கடலோர ஊர்க்காவல்படையினர், 35 டிரைவர், 34 சமையல் கலைஞர்கள், 5 பட்லர்கள் என மொத்தம் 1,044 பணியிடங்கள் நேரடி தேர்வின் மூலம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனைத்துக் கோயில்களின் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், கடவுள் உருவசிலைகள், அசையும் சொத்துக்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப் படும். கோவிலின் அனைத்து அசையா சொத்துகள் அனைத்தும் நில அளவை செய்து பாதுகாக்கப்படும். காரைக்கால் துறைமுகம் இலங்கையில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து இந்த ஆண்டு தொடங்கப்படும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுக கழகத்துடன் இணைந்து புதுவை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் இந்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கும். புதுவை இந்திராகாந்தி பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் இ-மருத்துவ சேவை தொடங்கப்படும். காரைக்காலில் புதிய அரசு மருத்துவமனை ரூ.80 கோடியில் கட்டப்படும். அதோடு காரைக்காலில் புதிய மருத்துவக்கல்லுாரி கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என பல அறிவிப்புகளை வெளியிட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.