Published:Updated:

புதுச்சேரி: பராமரிப்பின்றி உடைந்த படுகை அணை; அரசின் அலட்சியத்தால் வறண்டுபோன ஆறு!

உடைந்த படுகை அணை | சங்கராபரணி ஆறு
News
உடைந்த படுகை அணை | சங்கராபரணி ஆறு

பாரமரிப்பின்றி உடைந்த பிரெஞ்சுக் கால படுகை அணையை ஓராண்டு கடந்தும் சரி செய்யாததால், வறாண்டு போய் கிடக்கிறது புதுச்சேரி சங்கராபரணி ஆறு.

புதுச்சேரி: பராமரிப்பின்றி உடைந்த படுகை அணை; அரசின் அலட்சியத்தால் வறண்டுபோன ஆறு!

பாரமரிப்பின்றி உடைந்த பிரெஞ்சுக் கால படுகை அணையை ஓராண்டு கடந்தும் சரி செய்யாததால், வறாண்டு போய் கிடக்கிறது புதுச்சேரி சங்கராபரணி ஆறு.

Published:Updated:
உடைந்த படுகை அணை | சங்கராபரணி ஆறு
News
உடைந்த படுகை அணை | சங்கராபரணி ஆறு

புதுச்சேரி, திருக்கனூரை அடுத்திருக்கும் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் கிராமங்களுக்கு இடையே, சங்கராபரணி ஆற்றில் தண்ணீரை சேமிப்பதற்காக 1906-ம் ஆண்டு தடுப்பணையைக் கட்டியது அப்போதைய பிரெஞ்சு அரசு. அந்த அணையின் மூலம் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் தேவை பூர்த்தியாகி வந்தது. ஆனால், பொதுப்பணித்துறை அதைச் சரியாகப் பராமரிக்காததால், 2016-ம் ஆண்டு அதில் சிறிய உடைப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அப்போது அதை முறையாக சீரமைக்காமல், மணல் மூட்டைகளை மட்டும் அடுக்கி வைத்துவிட்டு அமைதியானது பொதுப்பணித்துறை. அதனால் கடந்த ஆண்டு பெய்த கனமழை, அதையொட்டி வீடுர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் படுகை அணையின் மையப் பகுதி முழுமையாக உடைந்தது. மிகச் சரியாக 140 மீட்டர் தூரத்துக்கு அணை உடைந்ததால், ஆற்றில் தேங்கியிருந்த நீர் முழுவதும் வீணாக வெளியேறியது. அப்போது மீண்டும் மணலைக் கொட்டி தற்காலிகமாக சீரமைக்க முயன்றது பொதுப்பணித்துறை.

இதற்கு எதிர்பு தெரிவித்த விவசாயிகள், நிரந்தர தீர்வாக சிமென்டை கொண்டு சீரமையுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அப்போது வெறும் களிமண்ணைக் கொண்டு உடைப்பை சரி செய்தது பொதுப்பணித்துறை. ஆனால், அதற்கடுத்த சில நாள்களிலேயே களிமண் முழுமையாகக் கரைந்து ஆற்றில் இருந்த நீர் முழுவதும் வெளியேறி, வறண்டு போனது சங்கராபரணி ஆறு.

உடைந்த படுகை அணை | சங்கராபரணி ஆறு
உடைந்த படுகை அணை | சங்கராபரணி ஆறு

அதையடுத்து புதிய அணை கட்டுவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரைபடங்களும் தயார் செய்யப்பட்டன. ஆனால், அதன்பிறகு அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதேநிலை நீடித்தால் சுற்றி உள்ள கிராமங்களில் இன்னும் சில மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.