Published:Updated:

குஜராத்: தாண்டியா நடனத்தில் கலக்கிய பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், விளையாட்டு வீரர் பி.வி சிந்து

பக்வந்த் மான், ராகவ்
News
பக்வந்த் மான், ராகவ்

குஜராத்: தாண்டியா நடனத்தில் கலக்கிய பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், விளையாட்டு வீரர் பி.வி சிந்து

Published:Updated:

குஜராத்: தாண்டியா நடனத்தில் கலக்கிய பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், விளையாட்டு வீரர் பி.வி சிந்து

குஜராத்: தாண்டியா நடனத்தில் கலக்கிய பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், விளையாட்டு வீரர் பி.வி சிந்து

பக்வந்த் மான், ராகவ்
News
பக்வந்த் மான், ராகவ்

குஜராத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேத்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழுவேகத்தில் களம் காண இருக்கிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக குஜராத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது இரண்டு நாள் பயணமாக ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், அக்கட்சி எம்.பி.ராகவ் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளனர். குஜராத்தில் இப்போது தசரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பி.வி சிந்து
பி.வி சிந்து

தசரா என்றாலே தாண்டியா நடனம் மிகவும் பிரபலமாகும். 9 நாட்களும் தினமும் தாண்டியா நடைபெறும். இந்த தாண்டியா நடனத்தில் நேற்று இரவு பக்வந்த் மானும், ராகவும் கலந்து கொண்டனர். ராஜ்கோட்டில் நடந்த தாண்டியா நடன நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு இருவரும் நடனமாடினர். பஞ்சாப் முறையில் பக்வந்த் மான் தாண்டியா நடனமாடியதை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். தாண்டியா நடனத்திற்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் குஜராத்திற்கு வந்துள்ளார். இன்று கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்துவும் குஜராத்தில் தாண்டியா நடனத்தில் பங்கேற்றார். நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த தாண்டியா நடனத்தில் பி.வி சிந்து கலந்துகொண்டு பெண்களோடு சேர்ந்து நடனம் ஆடினார். அவரோடு சேர்ந்து தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், திருப்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். அகமதாபாத்தில் பி.வி சிந்து தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பி.வி சிந்து கலந்து கொண்டார். நேற்று சூரத்தில் நடந்த பேட்மிட்டன் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். சிந்து சூரத்தில் நடந்த தாண்டியா நடனத்திலும் பங்கேற்றார். இதனால் விழா மிகவும் உற்சாகமாக இருந்தது.