ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 25 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `இந்தத் தீபாவளிக்கு நீங்கள் யாருக்காவது பரிசு கொடுத்திருப்பீர்கள்தானே... அது என்ன பரிசு? எதற்காகக் கொடுத்தீர்கள்?' என்பதை எழுதுங்களேன் நச்சென்று சில வரிகளில். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

இங்கே 8 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விடைகளை வட்டத்துக்குள் இருக்கும் கட்டங்களுக்குள் எழுதுங்கள். விடைகளில் வட்டமிட்டுள்ள எழுத்துகளை ஒன்று சேர்த்தால் இரண்டு வார்த்தைகள் கொண்ட ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். எழுதி அனுப்புங்கள்...

கேள்விகள்:

1. யானை வாங்குவார்கள், இது வாங்க மாட்டார்கள் என்பது ஒரு பழமொழி (5)

2. தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட வள்ளியம்மையின் சொந்த ஊர் (5)

3. நிலாவின் இன்னொரு பெயர் (4)

4. நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த காட்டு விலங்கு (3)

5. நீதானே என் பொன் ..........… (5)

6. இதுக்கு முந்து, படைக்குப் பிந்து என்பார்கள் (3)

7. வீடு கட்ட இது அவசியம் (4)

8. திருமணத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் இதை மாற்றிக்கொள்வார்கள் (3)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 25 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 25 - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி-23 விடைகள்...

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

1. முறுக்கு

2. அசோகா

3. கடலைமிட்டாய்

4. காராச்சேவு

5. பால்கோவா

6. மஞ்சள்

7. பலாப்பழம்

8. தேங்காய்

9. முட்டை

10. அல்வா

சரியான விடையுடன், `திரைப்பாடல்களில் உங்களுக்குப் பிடித்த மழைப் பாடல் எது? அது குறித்த இரண்டு வரி நினைவுகளுடன் பகிருங்கள்...' - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. எஸ்.சந்திரகலா, கலிங்கியம், ஈரோடு - `ஜானி’ படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றை தேடுதே...’ பாடல் - நானே மழையில் நனைந்துகொண்டு பாடும் உணர்வைத் தரும்.

2. ரூபி, மதுரை-16 - `வாரணம் ஆயிரம்’ படத்தின் ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ - இந்தப் பாடல் என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு கண்ணீர் மழை...

3. ராஜி கணேசன், சென்னை-87 - புதுமண ஜோடிகளான என் மாமா, மாமியுடன் ‘சபாஷ் மீனா’ படத்துக்கு நானும் சென்றேன். இருவருக்கும் நடுவில் அமர்ந்தபடி, அந்தப் படத்தின் `காணா இன்பம் கனிந்த தேனோ... என் காதல் திருமண ஊர்வலம்தானோ..’ மழைப்பாடலை ரசித்தது மறக்க முடியாது.

4. விஜயலக்ஷ்மி, மதுரை-9 - வண்ணப் பொடிகளைத் தூவிக்கொண்டு வயது வித்தியாசமின்றி ஆண் பெண் அனைவரும் `நாயகன்’ படத்தில் ஆடிப்பாடும் ‘அந்திமழை மேகம்’ பாடலை எப்போது கேட்டாலும் மனதுக்குள் மகிழ்ச்சி நிறையும்.

5. அபூர்வம், திருவள்ளூர் - மழை பெய்வதை ரசிக்கவே முற்றம் அமைத்து வீடு கட்டினோம். அதற்கு இன்ஸ்பிரேஷ னாக அமைந்தது ‘செந்தமிழ்ப்பாட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன தூறல் என்ன...’ - மழைப்பாடல்தான்.

6. உமா சேதுராமன், சென்னை-47 - `ராஜபார்வை’ படத்தில் ‘அந்திமழை பொழிகிறது’ பாடலை சமீபத்தில் கேட்டபோது ஓராண்டு முன்பு மறைந்த எஸ்.பி.பி-யின் இனிய குரல் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

7. தங்கமணி சுரேஷ்குமார், கோவை-10 - சில வருடங் களுக்கு முன், மே மாத கோடை இரவில் முற்றத்தில் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தபோது இடி மின்னலுடன் வந்த மழையின்போது `குஷி’ படத்தில் வரும் ‘மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது’ பாடலுக்கு குழந்தைகளுடன் ஆடிப்பாடி நனைந்ததை மறக்க முடியாது.

8. சி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி - சென்னை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது `மெளன ராகம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓஹோ மேகம் வந்ததோ’ பாடலின் படப்பிடிப்பை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் எனக்குள்ளும் அந்த நினைவுகள் மலரும்.

9. ஆர்.அஜிதா, கம்பம் - நானும் என் கணவரும் ‘ரோமியோ ஜூலியட்’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். அடை மழை பெய்துகொண்டிருக்க, அந்தப் படத்தில் வரும் ‘தூவானம் தூவானம் தூவ மழைத் துளிகளில்’ என்ற பாடலை முணுமுணுத்தபடி வீடு வந்து சேர்ந்தது செம ரொமான்ட்டிக் அனுபவம்.

10. நிர்மதி, சென்னை-24 - கல்லூரியில் படித்தபோது தோழிகளுடன் `இதயத்தைத் திருடாதே' படத்துக்குச் சென் றேன். அதில் இடம்பெற்ற ‘ஆத்தாடி அம்மாடி' பாடலுக்கு நாங்கள் போட்ட ஆட்டத்தை இன்றும் மறக்க முடியாது.