Published:Updated:

``ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது” - சத்ருகன் சின்ஹா கருத்தால் திரிணாமுல் ஷாக்

சத்ருகன் சின்ஹா
News
சத்ருகன் சின்ஹா

``ராகுல் காந்தி இளைஞர்களின் அடையாளமாக உருவெடுத்திருக்கிறார்” என்று நடிகர் சத்ருகன் சின்ஹா பாராட்டியிருக்கிறார்.

Published:Updated:

``ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது” - சத்ருகன் சின்ஹா கருத்தால் திரிணாமுல் ஷாக்

``ராகுல் காந்தி இளைஞர்களின் அடையாளமாக உருவெடுத்திருக்கிறார்” என்று நடிகர் சத்ருகன் சின்ஹா பாராட்டியிருக்கிறார்.

சத்ருகன் சின்ஹா
News
சத்ருகன் சின்ஹா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடத்திவரும் பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த யாத்திரையை பாஜக ஆரம்பத்திலிருந்தே கிண்டல் செய்துவருகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சத்ருகன் சின்ஹா ராகுல் காந்தியின் யாத்திரையைப் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கிற செய்தியில், ``ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை புரட்சிகரமான ஒன்றாகும். இந்த யாத்திரை மூலம் இளைஞர்களின் அடையாளமாக ராகுல் காந்தி உருவெடுத்திருக்கிறார்.

``ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது” - சத்ருகன் சின்ஹா கருத்தால் திரிணாமுல் ஷாக்

நாடு இதற்கு முன்பு இது போன்ற ஒரு யாத்திரையைக் கண்டதில்லை. அவரின் நோக்கம் நல்லது. ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது. ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராகப் பணியாற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். சத்ருகன் சின்ஹாவின் இந்தக் கருத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில்கூட சேர்த்துக்கொள்ள மறுத்துவருகிறார். அப்படி இருக்கையில், ராகுல் காந்தியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி பாராட்டியிருப்பது மேலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ``சத்ருகன் சின்ஹா வெளியிட்டிருக்கிற அறிக்கைக்கும் கட்சிக்கும் தொடர்பு கிடையாது. அது அவரின் தனிப்பட்ட கருத்து. அனைத்துக் கட்சிகளும் கலந்து ஆலோசித்த பிறகு பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் முதலில் தனது கட்சியை ஒன்று சேர்க்க வேண்டும். கட்சி உடைவதைத் தடுக்க வேண்டும். பாஜக எதிர்ப்புக் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சத்ருகன் சின்ஹா ஆரம்பத்தில் பாஜக-வில் இருந்தார். பின்னர் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.