Published:Updated:

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர்

சர்தார் வல்லபாய் படேல் சிலை
News
சர்தார் வல்லபாய் படேல் சிலை

உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் படேல் சிலையின் உள்ளே உள்ள கேலரியின் கூரை வழியாக மழைநீர் வெளியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published:Updated:

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர்

உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் படேல் சிலையின் உள்ளே உள்ள கேலரியின் கூரை வழியாக மழைநீர் வெளியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் சிலை
News
சர்தார் வல்லபாய் படேல் சிலை

குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில், சர்தார் சரோவர் அணையின் அருகே 2,989 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. 3,400 பணியாளர்கள், 250 பொறியாளர்கள் இணைந்து இரவுபகலாக வேலை செய்து 42 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது இந்த உலகின் மிக உயரமான சிலை.

சர்தார் வல்லபாய் படேல் சிலை
சர்தார் வல்லபாய் படேல் சிலை

வல்லபபாய் படேலின் 143-வது பிறந்த தினமான அக்டோபர் 31, 2018 அன்று சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. அந்தச் சிலை திறக்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. `நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும் போது 3,000 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலை தேவையா?’ என எதிர்க்கட்சிகள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இது ஒரு புறம் இருந்தாலும், படேல் சிலை திறக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதி முழுவதும் சுற்றுலா தளமாக மாறியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிலையைப் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில் சிலையில் உள்ள பார்வையாளர்கள் கேலரியின் மேற்கூரை வழியாக மழை நீர் உள்ளே வருவதாக சுற்றுலாப்பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

படேல் சிலை
படேல் சிலை

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டுக்கான பருவ மழை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கியது. அதனால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. படேல் சிலை உள்ள பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. சர்தார் வல்லபபாய் படேல் சிலையைப் பார்க்க வருபவர்கள் அங்கிருந்து நர்மதை நதியின் அழகைக் கண்டு ரசிக்கும் படியாக சிலையின் உள்ளே 153 அடி உயரத்தில் பார்வையாளர்கள் கேலரி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கன மழையால் அந்த கேலரியின் மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுகுவதாகச் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். சிலையின் உள்ளே நீர் வெளியேறும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. படேல் சிலை திறக்கப்பட்ட பிறகு வரும் முதல் பருவ மழை என்பதால் `முதல் மழைக்கே 3000 கோடி ரூபாய் சிலை தாங்கவில்லை’ என்பது போன்ற பல கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

கேலரியில் மழை நீர்
கேலரியில் மழை நீர்

ஒற்றுமைக்கான சிலையின் தலைமை நிர்வாக அதிகாரி ஐ.கே படேல் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``படேல் சிலையின் உள்ளே 153 அடி உயரத்தில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டுள்ளனர். அந்த கேலரியின் பின் பகுதியில் நின்று பார்த்தால் இயற்கையின் மொத்த அழகும் தெரியும். அங்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கான கண்ணாடிச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பின் பகுதியில் மழைநீர் வர வாய்ப்புகள் இல்லை.

அதுவே படேல் சிலையின் முன் பகுதியில், அதாவது சிலையில் மார்பு பகுதியில் நின்று பார்த்தால் நர்மதை ஆற்றின் அழகு தெரியும். அங்கு கண்ணாடிச் சுவர் இல்லாமல், பாதுகாப்புக்காகக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலையின் வடிவமைப்பே அப்படிதான் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக மழை மற்றும் காற்றின் வேகத்தினால் மழை நீர் கம்பிகள் வழியாக உள்ளே வருகிறதே தவிர கேலரியின் கூரையில் எந்தப் பிரச்னையும் இல்லை. கேலரியின் எந்தப் பகுதியிலும் மழைநீர் ஒழுகவில்லை” எனத் தெரிவித்துள்ளார். படேல் சிலைக்குக் கீழே உள்ள அருங்காட்சியகத்திலும் இதே போன்று மழை ஒழுகுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.