Published:Updated:

ராஜபாளையத்தில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை - பணிச்சுமை காரணமா?!

ஜோஸ்வா ரஞ்சித்
News
ஜோஸ்வா ரஞ்சித்

ராஜபாளையத்தைச் சேர்ந்த காவலரின் தற்கொலைக்கு, குடும்பப் பிரச்னை காரணமா, பணிச்சுமை காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:

ராஜபாளையத்தில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை - பணிச்சுமை காரணமா?!

ராஜபாளையத்தைச் சேர்ந்த காவலரின் தற்கொலைக்கு, குடும்பப் பிரச்னை காரணமா, பணிச்சுமை காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஜோஸ்வா ரஞ்சித்
News
ஜோஸ்வா ரஞ்சித்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஜோஸ்வா ரஞ்சித் (வயது 47). 26 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றிவரும் இவர், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்தார். இந்த நிலையில் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ஜோஸ்வா, காலையில் வெகுநேரமாகியும் சாப்பிடுவதற்காக வீட்டு மாடியறையிலிருந்து கீழிறங்கி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரின் தாய் அமிர்தபாக்கியம் மாடிக்குச் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஜோஸ்வாவைப் பலமுறை சத்தம் கொடுத்து கூப்பிட்டும் கதவு திறக்கப்படாததால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியிருக்கிறார். தொடர்ந்து கதவை உடைத்துப் பார்த்தபோது ஜோஸ்வா ரஞ்சித் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் பிணமாகக் கிடந்திருக்கிறார்.

காவலர் ஜோஸ்வா
காவலர் ஜோஸ்வா

இது குறித்து அமிர்தபாக்கியம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஜோஸ்வா ரஞ்சித்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த ஜோஸ்வா ரஞ்சித்தின் முதல் மனைவி கிரேசி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் தங்கி, பயின்றுவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக நிர்மலா என்ற பெண் காவலரை இரண்டாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்துவந்திருக்கிறார். ஜோஸ்வாவின் இரண்டாவது மனைவி நிர்மலா தற்போது கோவில்பட்டியில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜோஸ்வா ரஞ்சித்தின் தற்கொலை குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பணி முடிந்து வீட்டுக்கு வந்த ஜோஸ்வா ரஞ்சித் நீண்ட நேரமாக நள்ளிரவு வரை செல்போனில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் காவலரின் தற்கொலைக்கு, குடும்பப் பிரச்னை காரணமா அல்லது பணிச்சுமை காரணம என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.