
கிச்சன் மேஜிக்
நான் ஸ்டேட் பேங்க் ஊழியர். கணவர் கார்த்திகேயன் ஐ.டி புரொஃபஷனல். ரெண்டு பேரும் வொர்க் பண்றதுனால காலையில எழுந்து பரபரன்னு ஓடிட்டே இருப்போம். எங்களுக்கு அஞ்சு வயசுல மகன் இருக்கான். பேரு க்ருத்திக் ஸ்ரீவத்சன்.
எங்க வீட்டுல வேலைக்காரம்மா இருக்காங்க. இது லாக் டெளன் நேரம். ஸோ, அவங்களுக்கு லீவு கொடுத்து அனுப்பியாச்சு. இப்பவும் நான் தினமும் வேலைக்குப் போயிட்டு வர வேண்டிய சூழல். அதனால எனக்கு லாக் டெளனும் நார்மல் நாள்களும் ஒண்ணாதான் இருக்கு. என் கணவர் சமையலறைக்கே போகாத டிபிக்கல் தமிழ்நாட்டு/இந்தியன் கணவர். வெந்நீர் வைக்கத் தெரியுமான்னுகூட தெரியலை!

ஒருநாள் காலையில எழுந்து, குழந்தையை ரெடி பண்ணி சாப்பாடு ஊட்டிட்டு, ஆபீஸ் போயிட்டேன். வேலையெல்லாம் முடிச்சு ரொம்ப பசியோட வீட்டுக்குள்ள நுழைஞ்சா கிச்சன்ல இருந்து கமகம மணம். `என்னடா வேற வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டோமா'ன்னு ஒரு நிமிஷம் எனக்கு சந்தேகமே வந்திருச்சு.
உள்ளே டைனிங் டேபிள்ல ஹாட் பேக். திறந்து பார்த்தா வெஜிடபிள் பாஸ்தா. நான் ஆச்சர்யத்தில் விழிகள் விரிக்க... என் கணவர் கார்த்திகேயன் கையில ஃபில்டர் காபியோட வந்து ஆச்சர்யப்படுத்திட்டார்.

யூடியூபைப் பார்த்து எங்க ரெண்டு பேரோட ஃபேவரைட் ரெசிப்பியான வெஜிடபிள் பாஸ்தாவை செய்திருக்கார். அதுவும் நம்ம மசாலாக்களைப் பயன்படுத்தி செய்திருக்கார்.
என் மகனுக்கு மதியம் சாப்பாடு ஊட்டித் தூங்க வெச்சுட்டு மனுஷன் களத்துல குதிச்சிருக்கார். லாக் டெளன் காலம் என் கணவர்கிட்ட இப்படியொரு மேஜிக்கை நிகழ்த்தும்னு நான் கனவுல கூட நினைக்கலை. டென்ஷனோட ஓடிக்கிட்டிருக்கிற பிஸியான லைஃப்ல இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம்தான் நிறைய பாசிட்டிவ் உணர்வைத் தருது!
சந்தியா கார்த்திகேயன், சென்னை-26