தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நேரம் நல்ல நேரம்!

ஷியாமளா தேவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷியாமளா தேவி

ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட்

நான் ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட் ஃபீல்டுல 30 வருஷங்களா இருக்கேன். காலேஜ், ஸ்கூல், என்னோட பிசினஸ்னு பம்பரமா சுழல்ற ஆள் நான். காலையில வீட்டை விட்டு கிளம்பினா, மறுபடியும் வீட்டுக்கு வர ராத்திரி ஏழு மணி ஆகிடும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் ரெஸ்ட் கிடைக்காதான்னு பல நாள்கள் ஏங்கியிருக்கேன். அதுக்கான வாய்ப்பைத் தந்தது லாக் டெளன் பீரியட். சும்மா சொல்லக் கூடாது... ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல... பத்து மணி நேரம் சும்மா கிடைச்சது. விடுவேனா அந்த நேரத்தை!

நேரம் நல்ல நேரம்!
ஷியாமளா தேவி
ஷியாமளா தேவி

கிராஃப்ட்டுக்குத் தேவையான பொருள் களை வெளியில போய் வாங்க முடியாது. அப்படியே வீட்டை நோட்டம் விட்டேன். வீட்ல இருந்த சாக்லேட் டப்பா, பை, மரக்கட்டை, டப்பா, வாட்டர் பாட்டில்னு எல்லாமே என் கண்ணுக்கு கிராஃப்டா தெரிஞ்சது. அவ்வளவுதான்... பெயின்ட், பிரஷ்ஷோடு களத்துல குதிச்சுட்டேன். துணிப்பையில சூப்பரா பெயின்ட் பண்ணி னேன். வாட்டர் பாட்டில் அழகாச்சு. பேப்ரிக், மியூரல் ஆர்ட், கிளாஸ்ட் ஆர்ட், ஆர்காமின்னு எல்லாத்தையும் இன்டர்நெட்ல பார்த்து, என்னோட கிரியேட்டிவிட்டியையும் சேர்த்து உருவாக்கினேன். அடுத்த வருஷம் என் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியதை இப்பவே தயார் பண்ணி வெச்சுட்டேன். இந்த லாக் டெளன் நேரத்தை இவ்வளவு யூஸ்ஃபுல்லா உபயோகிச்சிருக்கேன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஷியாமளா தேவி, சென்னை-4