தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் வந்தாளே!

ஆதிரை வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதிரை வேணுகோபால்

நட்புக்காலம்

2020 ஏப்ரல் 5 அன்று வந்த அலைபேசி. ‘ஹேய் ஆதி நான் அனு பேசுறேன்.

யாருன்னு தெரியுதா...'னு கேட்டதும் சட்டுன்னு மின்னல் வெட்டின மாதிரி ஒரு ஷாக்.

அவள் வந்தாளே!

35 வருஷத்துக்கு முன்னாடி வளவனூரில் நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சப்ப என்னுடன் படிச்சவதான் இந்த அனு. பள்ளியில் எங்களை A2 (Aathirai, Anushya) என்று ஆசிரியர்கள் அழைத்ததுண்டு. நான் முதல் நாள் பள்ளிக்குக் கறுப்புச் சட்டையும் இளஞ்சிவப்பு குட்டைப் பாவாடையும் அணிந்து வந்தேன் என்பதைகூட நினைவுவைத்து சொன்னாள். ஆடிப்போய்விட்டேன்.

ஆதிரை வேணுகோபால்
ஆதிரை வேணுகோபால்

என்னைத் தேடி கண்டுபிடித்து பேச எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். சிலிர்த்துப்போனேன். என்னைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தாள். என்னை இத்தனை நுணுக்கமாக ஒருவர் கவனித்து அன்பு செலுத்த முடியுமா என்று நினைத்து நினைத்து ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறாள் அனுஷியா. ஊரடங்கு நல்லதும் செய்யும் என்று நான் அறிந்துகொள்வதற்காகவே வந்தாளோ அவள்!

ஆதிரை வேணுகோபால், சென்னை-94