தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தேவதைகள் மீண்டும் பிறப்பார்கள்!

சரஸ்வதி அசோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சரஸ்வதி அசோகன்

மறக்க முடியவில்லை

ன் பேத்தி ஆருத்ரா. குடும்பத்தின் செல்லப்பிள்ளை. அவளைக் கடவுளுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு நினைக்கிறேன். மூணாவது படிக்கிறப்ப தலை வலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்தா. கடைசில பிரைன் ட்யூமர்னு சொன்னாங்க.

தேவதைகள் மீண்டும் பிறப்பார்கள்!

அவளை நான்தான் குழந்தைல இருந்து வளர்த்துட்டு வந்தேன். படிப்புல இருந்து பாட்டு, நடனம், கோலம், சமையல்னு எல்லாத்துலேயும் ஃபர்ஸ்ட்டா வருவா. தங்கமான பொண்ணு. பெங்களூரு, சென்னைனு அவளுக்கு ஆபரேஷன், கீமோதெரபின்னு எல்லா சிகிச்சையும் செய்து, ஒரு கட்டத்தில் அவளை எங்க சொந்த ஊரான கரூருக்கே கூட்டிட்டு வந்துட்டோம். மாற்று மருத்துவத்தில் சிகிச்சை அளிச்சோம். கட்டி வளர்ச்சி குறைஞ்சது. ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா, திடீர்னு மூளையில இருந்து முதுகுத்தண்டுல பரவ ஆரம்பிச்சுருச்சு.

நான் யூடியூப் சேனல் நடத்தறேன். அந்த வேலைகளின்போது என்கூட உதவிக்கு நிற்பாள். அவளுக்கு உடம்பு சரியில்லாம போனதுலேருந்து நான் யூடியூப் பக்கமே போகலை. ஊருக்கெல்லாம் ருசியா சமையல் சொல்லித்தந்த எனக்கு, என் பேத்திக்கு ருசியா சமைச்சுப் போட முடியாத நிலை.  ஒருகட்டத்துல நான் சமைச்சா என் சமையல் வாசனை அவளுக்கு போச்சுன்னா மனசு வேதனைப்படுமேன்னு வீட்டுல சமைக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். என் சொந்தக்காரங்க சாப்பாடு கொண்டு வந்து தருவாங்க. அவ பார்க்காத ஓர் இடத்துல உட்கார்ந்து மனசே இல்லாம சாப்பிடுவோம். மறுபடியும் மூளையில கட்டி வளர ஆரம்பிச்சு, போன வருஷம் மார்ச் மாசம் ஆருத்ரா எங்களைவிட்டு நிரந்தரமா பிரிஞ்சு கடவுள்கிட்டயே போயிட்டா.

சரஸ்வதி அசோகன்
சரஸ்வதி அசோகன்

அதுக்கப்புறம் அவளை நினைச்சு நினைச்சு என் உடல்நிலை, மனநிலையெல்லாம் பாதிச்சது. ஆனாலும், விடாப்பிடியா மீண்டு வந்தேன். என்னோட இன்னொரு பேத்திக் காகவும், என் ஆருத்ரா நிச்சயம் என் மக வயித்துல மறுபடியும் பொறப்பாங்கிற நம்பிக்கையிலேயும் மறுபடியும் யூடியூப் உள்ளே நுழைஞ்சிருக்கேன்.

சரஸ்வதி அசோகன், கரூர்